கொவிட்-19 மரணங்கள் கூடும் வாய்ப்பு; பூஸ்டர் தடுப்பூசி முதியோருக்கு கடும் பாதிப்பு ஏற்படுவதை 10 மடங்கு குறைக்கும்

சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19 தொடர்­பான மர­ணங்­கள் அடுத்த சில வாரங்­களில் அல்­லது மாதங்­களில் அதி­க­ரிக்க வாய்ப்பு இருப்­ப­தாக பிர­த­மர் லீ சியன் லூங் நேற்று தெரி­வித்­தார்.

தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ள­வில்லை என்­றால் உட­ன­டி­யாக போட்­டுக்­கொள்­ளும்­படி முதி­யோரை அவர் வலி­யு­றுத்­தி­னார்.

தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட முதி­ய­வர்­கள் பூஸ்­டர் தடுப்­பூ­சி­யை­யும் போட்­டுக்­கொள்ள வேண்­டும். இத­னால் கடு­மை­யான பாதிப்­பு­கள் 10 மடங்­கிற்­கும் அதி­க­மா­கக் குறைந்­து­வி­டும் என்று பிர­த­மர் தெரி­வித்­தார்.

கொவிட்-19 சூழ்­நிலை பற்றி நாட்டு மக்­க­ளுக்கு நேற்று திரு லீ உரை­யாற்­றி­னார்.

மருத்­து­வர்­களும் தாதி­யர்­களும் தங்­க­ளால் ஆன அனைத்து முயற்சி­களை செய்­தா­லும்­கூட கடு­மை­யா­கப் பாதிக்­கப்­பட்ட எல்­லா­ரை­யும் காப்­பாற்­றி­வி­ட­லாம் என்­பது மிக­வும் சிர­ம­மா­னது.

சளிக்­காய்ச்­சல் போலவே ஒரு சிலர் மர­ண­ம­டை­யக்­கூ­டிய வாய்ப்பு இருக்­கிறது.

சிங்­கப்­பூ­ரில் ஒவ்­வோர் ஆண்டும் 4,000க்கும் மேற்­பட்ட மக்­கள் சளிக்­காய்ச்­சல் கார­ண­மாக மர­ண­ம­டை­கி­றார்­கள். அவர்­களில் பெரும்­பாலா­ன­வர்­கள் பல உடல்­ந­லப் பிரச்­சி­னை­கள் உள்­ள முதி­ய­வர்­கள் என்று கூறிய திரு லீ, அடுத்த சில வாரங்­களில் அல்­லது மாதங்­களில் கொவிட்-19 மர­ணங்­கள் அதி­க­ரிக்க வாய்ப்பு இருப்­ப­தா­கத் தெரி­வித்­தார்.

சிங்­கப்­பூ­ரில் கொரோனா தொற்றுக் கார­ண­மாக மாண்டவர்­களில் ஏறக்­கு­றைய அனை­வ­ருமே 60 வயதும் அதற்­கும் அதிக வயதும் உள்­ள­வர்­கள்.

பலர் உடல்­ந­லப் பிரச்­சி­னை­களை எதிர்­நோக்­கி­ய­வர்­கள் என்­பதை அவர் சுட்­டி­க்காட்டினார்.

அன்­றா­டம் புதி­தாக 5,000 பேரை கிருமி தொற்­றும் பட்­சத்­தில் நாள்­தோ­றும் ஏறத்­தாழ 100 பேர் கடுமை­யா­கப் பாதிக்­கப்­ப­டு­வார்­கள் என்றும் இது குறை­வான எண்­ணிக்கை அல்ல என்­றும் பிர­த­மர் லீ தெரிவித்தார்.

சிங்­கப்­பூ­ரர்­களும் முதி­ய­வர்­களும் தங்­க­ளைத் தாங்­களே பாது­காத்­துக்­கொண்டு கிருமித்தொற்று, மரண எண்­ணிக்­கை­யைக் குறைப்­பதற்கு பல­வற்­றையும் செய்­ய­முடியும் என்­றும் பிரதமர் குறிப்பிட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!