கடைத்தொகுதிக்கு காலக்கெடு

சிங்கப்பூரின் கடைத்தொகுதிகளில் வெவ்வேறான பாதுகாப்பு நடைமுறைகள் அமலாக இருக்கின்றன. அது பற்றி கடைத்தொகுதி நிர்வாகிகளும் மற்றவர்களும் நன்கு புரிந்துகொள்ளும் வகையில் அவர்களுக்கு அக்டோபர் 13 முதல் அக்டோபர் 19 வரை ஒரு வார காலஅவகாசம் வழங்கப்படும்.

அத்தகைய கட்டடங்களில் செயல்படும் குழந்தைப் பராமரிப்பு மற்றும் மருத்துவ சேவை நிலை யங்களுக்குத் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் செல்வதற்கு அனுமதிக்கும் ஓர் ஏற்பாடும் அதில் உள்ளடங்கும்.

வர்த்தக, தொழில் அமைச்சும் எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பும் நேற்று அறிக்கை ஒன்றில் இதனைத் தெரிவித்தன.

தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் கடைத்தொகுதிகளில் செயல்படும் மருத்துவ, குழந்தைப் பராமரிப்பு சேவை நிலையங்களுக்குச் செல்ல வேண்டிய தேவை இருப்பதன் தொடர்பில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளைத் தாங்கள் கவனத்தில் கொண்டிருப்பதாக இந்த அமைப்புகள் தெரிவித்தன.

புதிய விதிமுறைகள் பற்றி நன்கு தெரிந்துகொள்ள ஏதுவாக கடைக்காரர்கள், கடைத்தொகுதி நடத்துவோர் பொதுமக்களுடன் தாங்கள் அணுக்கமாகச் செயல்பட்டு வருவதாகவும் அவை கூறின.

தடுப்பூசி அடிப்படையிலான பாதுகாப்பு நடவடிக்கைகளை நேற்று முன்தினம் கொவிட்-19 சிறப்புப் பணிக்குழு அறிவித்தது.

அதன்படி, தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் உணவகங்களில் சாப்பிட முடியாது. கடைத்தொகுதிகளுக்கு, தனிக் கடைகளுக்குச் செல்ல முடியாது. இந்தப் புதிய விதிகள் அக்டோபர் 13ஆம் தேதி நடப்புக்கு வருகின்றன.

தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களைப் பாதுகாக்கவும் சிங்கப்பூர் சுகாதாரப் பராமரிப்பு முறைக்கு ஏற்படக்கூடிய சுமையைக் குறைக்கவும் இவை இடம்பெறுவதாக இந்தப் பணிக்குழு கூறியது.

அக்டோபர் 13ஆம் தேதிக்கு முன்னதாக மேல் விவரங்கள் வெளியிடப்படும் என்று அமைச்சும் இந்த அமைப்பும் தெரிவித்தன.

தடுப்பூசி போட்டுக்கொள்ளாதோர்க்குத் தடை; விதியை அமல்படுத்தத் தயாராவதில் உதவி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!