பாதுகாப்பான இடங்களைப் பரிந்துரையுங்கள்: பயண முகவர்களுக்குப் பலரும் கோரிக்கை

பயண கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதை அடுத்து சிங்கப்பூரர்கள் பாதுகாப்பான பயணங்களை மேற்கொள்ள முயற்சிகளை எடுத்து வருகிறார்கள்.

கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் அக்டோபர் 19 முதல் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளுக்குச் செல்லலாம். ஐரோப்பிய நாடுகளுக்கும் அவர்கள் செல்ல முடியும்.

நவம்பர் 15 முதல் தென்கொரியாவுக்கும் பயணம் மேற்கொள்ள முடியும். ஐரோப்பிய நாடுகளில் பாதுகாப்பான நடைமுறைகள் கடைப்பிடிக்கப்படுவது பற்றி மேலும் தகவல்கள் தெரிவிக்கும்படி பலரும் தங்களைக் கேட்டு இருப்பதாக பயண முகவர்கள் கூறுகிறார்கள்.

தொற்று காலத்தில் வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்வது எந்த அளவுக்குப் பாதுகாப்பாக இருக்கும் என்பது பற்றி சிங்கப்பூரர்களிடம் இன்னமும் அச்சம் நிலவுகிறது என்பதையே எடுத்துக்காட்டுவதாக இது இருக்கிறது.

'சான் பிரதர்ஸ் டிராவல்' நிறுவனத்தின் பேச்சாளர், கொவிட்-19 தொற்றை சிறந்த முறையில் கையாண்டு இருக்கும் இடங்கள் உண்டா என்று பலரும் கேட்டிருப்பதாகக் கூறினார். பாதுகாப்பான பயண ஏற்பாடுகள் குறித்தும் பலரும் கேட்டனர்.

இதனிடையே, அடுத்த ஆண்டு முதல்பாதியில் வெளிநாட்டு பயணங்கள் கணிசமான அளவுக்குச் சூடுபிடிக்கும் என்று 'டைனாஸ்டி டிராவல்' நிறுவனம் எதிர்பார்ப்பதாக அதன் பேச்சாளர் திருவாட்டி அலிசியா சியா தெரிவித்தார்.

தென்கொரியப் பயணத்தில் அதிகம் பேர் நாட்டம் காட்டுவதாகத் தெரிகிறது என்று சுற்றுப்பயண முகவர்கள் குறிப்பிட்டு உள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!