முழுமையான கற்றலை ஊக்குவிக்கும் விரிவுரையாளருக்கு நல்லாசிரியர் விருது

பாவை சிவக்­கு­மார்

கொவிட்-19 கிரு­மித்­தொற்­றுச் சூழ­லால் உயர்­கல்வி நிலை­யங்­களில் பயி­லும் மாண­வர்­க­ளுக்­குப் பெரும் அசெ­ள­க­ரி­யம் ஏற்­பட்­டுள்­ளது. எப்­படி படிப்­பைத் தொட­ரப் ­போ­கி­றோம் என்ற ஐயங்­களும் சில­ரி­டையே நில­வத் தொடங்­கி­யது.

‘கவலை வேண்­டாம், உங்­கள் படிப்­புக்­குத் துணை­யாக நான் இருக்­கி­றேன்’ என்று கூறித் தம் மாண­வர்­க­ளுக்கு ஆறு­த­லும் ஆத­ர­வும் அளித்­து வருகிறார் தொழில்­நுட்­பக் கல்­விக் கழ­க (கிழக்கு கல்­லூரி) விரி­வு­ரை­யா­ளர் 37 வயது தினேஷ் துள­சி­த­ரன்.

சிங்­கப்­பூர் பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரி­யில் இயந்­திர மின்­ன­ணு­வி­யல் துறை­யில் பட்­ட­யக்­கல்வி முடித்­து­விட்டு, தமக்­குப் பிடித்த பணி­யில் இருக்க வேண்­டும் என்­ப­தற்­காக உட­லு­று­தித் துறை­யில் பயிற்­று­விப்­பா­ள­ரா­கச் சேர்ந்­தார்.

விளை­யாட்டு அறி­வி­ய­லி­லும் மேற்­படிப்பு மேற்­கொண்­டுள்­ளார்.

மற்ற உட­லு­றுதி பயிற்­றுவிப்­பா­ளர்­களுக்­கும் இவர் பயிற்சி வழங்­கி­யுள்­ளார்.

எதிர்­கால உட­லு­று­திப் பயிற்­று­விப்­பாளர்­களை உரு­வாக்க வேண்­டும் என்ற முனைப்­பு­டன் தமது 29வது வய­தில் தொழில்­நுட்­பக் கல்­விக் கழ­கத்­தில் உட­லு­று­திப் பயிற்சி அளிக்­கும் விரி­வு­ரை­யா­ளர் பணி­யில் இணைந்­தார்.

விளை­யாட்டு நிர்­வா­கம் மற்­றும் வர்த்­த­கச் சேவைத் துறை­கள் தொடர்­பான பாடங்­களை மாண­வர்­க­ளுக்­குக் கற்­றுத் தரும் இவர், மாண­வர்­க­ளின் வேலைப் பயிற்­சித் திட்­டத்­தின் ஒருங்­கி­ணைப்­பாளரா­க­வும் செயல்­ப­டு­கி­றார்.

“கொவிட்-19 காலம் தொடங்­கி­ய­தி­லி­ருந்து மாண­வர்­கள் மன நலப் பிரச்­சி­னை­க­ளை­யும் சந்­தித்து வரு­கின்­ற­னர். நேர­டி­யாக அவர்­க­ளைச் சந்­திக்க முடி­யாத நிலை­யில் தொலை­பேசி வழி அவர்­களு­டன் தொடர்­பு­கொண்டு நலம் விசா­ரித்து, அறி­வுரை வழங்­கி­னேன்.

“இத­னால் தங்­க­ளுக்கு உதவ ஒரு­வர் இருக்­கி­றார் என்ற நம்­பிக்­கை­யும் அவர்­க­ளுக்கு வந்­து­வி­டு­கிறது,” என்று கூறி­னார் தினே‌ஷ்.

கற்­றல் தளங்­களில் மெய்­நி­கர் வகுப்பு­கள் சுவா­ர­சி­ய­மாக இருக்க வேண்­டும் என்­ப­தற்­காக மாண­வர்­க­ளைக் குழுக்­களாகப் பிரித்து, ஆய்வு மேற்­கொள்ள சொல்லி, அதைச் சக மாண­வர்­கள் முன்­னி­லை­யில் படைக்­க­வும் செய்­தார் தினேஷ்.

மாண­வர்­கள் இத்­த­கைய நட­வ­டிக்கை­களில் ஈடு­பாட்­டு­டன் பங்­கேற்­ற­து­டன் சிலர் புதிர்ப்­போட்­டி­க­ளை­யும் அதன் தொடர்­பான இணைய விளை­யாட்­டு­களை­யும் உரு­வாக்­க­வும் முனைந்­த­னர்.

கடந்­தாண்டு கொவிட்-19 சூழ்­நி­லை­யால் நேரடி விளை­யாட்டு வகுப்­பு­கள் தற்­கா­லி­க­மாக ரத்­து­செய்­யப்­பட்­டன.

சக பணி­யா­ளர்­க­ளு­டன் தினேஷ் இணைந்து மூன்று மாதங்­களில் ஒரு செய­லியை உரு­வாக்­கி­னார். மாண­வர்­களை உடற்­ப­யிற்சி நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டச் செய்ய ‌இச்­செ­யலி பேரு­த­வி­யாக இருந்­தது.

படிப்­பில் சிறந்து விளங்­கி­னால் மட்­டும் போதாது. அடக்­க­மு­டைமை, மரி­யாதை, சேவை மனப்­பான்­மை­யு­டன் பேசத் தெரி­வது போன்ற பண்­பு­களை மாண­வர்­க­ளி­டத்­தில் வளர்ப்­ப­தும் ஒரு மாண­வரின் முழு­மை­யான கல்­விப் பய­ணத்­தில் அடங்­கும் என்­பதை அறிந்து அதை நோக்கி தினே‌ஷ் தம் பங்கை ஆற்றி வருகிறார்.

சிறப்புத் தேவை­கள் தொடர்­பான விளக்க வகுப்­பு­க­ளை­யும் நடத்தி மாண­வர்­க­ளி­டையே விழிப்­பு­ணர்வு ஏற்­ப­டுத்­து­வ­தி­லும் தினே‌ஷ் கவ­னம் செலுத்தி வரு­கி­றார்.

கடந்த எட்டு ஆண்­டு­க­ளாக மாண­வர்­க­ளுக்கு ஒரு முன்­மா­தி­ரி­யா­க­வும் நண்­ப­ரா­க­வும் விளங்­கும் இவ­ருக்கு, இவ்­வாண்­டின் தொழில்­நுட்­பக் கல்­விக் கழக நல்­லாசிரி­யர் விருது வழங்­கப்­பட்­டது.

“வெற்றி அடைந்­தால் செருக்­கு­டன் இருக்­காதே. தோல்வி அடைந்­தால் துவண்­டு­விடாதே” என்­பதை அடிக்­கடி தன் மாண­வர்­களுக்கு நினை­வூட்டுவதாகச் சொல்கிறார் இந்த ஆசான்.

மாண­வர்­க­ளின் கற்­றல் அனு­ப­வத்தை மெரு­கூட்ட வேண்டும் என்பதற்காக தற்­போது தேசிய கல்விக் கழ­கத்­தில் பயிற்சி, மேம்­பாடு சார்ந்த நிபு­ணத்­துவ கல்வி முது­கலை மேற்­ப­டிப்­பை மேற்­கொண்டு வரு­கி­றார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!