விண்வெளித் துறையில் மேலும் 1,000 வேலைகள்

சிங்கப்பூரில் விண்வெளித் துறை நிறுவனங்கள், அடுத்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 1,000 பேரை வேலைக்கு எடுக்கவிருப்பதாக வர்த்தக, தொழில்துறைக்கான இரண்டாவது அமைச்சர் டான் சீ லெங் இன்று திங்கட்கிழமை தெரிவித்தார்.

மின்னிலக்க சேவைகள், தானியக்கத் தொழில்நுட்பங்கள் போன்ற துறைகளில் இந்த வேலைகள் உருவாக்கப்படும். தரவுப் பகுப்பாய்வாளர்கள், இயந்திரவியல் பொறியாளர்கள், விமானத் தொழில்நுட்பர்கள் ஆகியோருக்கும் வேலைகள் இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

கொவிட்-19 கிருமிப்பரவலின்போது வர்த்தக விமானப் பயணங்களை பயணத் தடைகளும் எல்லைக் கட்டுப்பாடுகளும் வெகுவாகக் குறைத்திருப்பதாக டாக்டர் டான் தெரிவித்தார். ஆயினும், விண்வெளித் துறை நடவடிக்கைகளுக்கான வலுவான தளமாக சிங்கப்பூர் தொடர்ந்து திகழ்ந்து வருவதாக அவர், இன்று தொடங்கப்பட்ட விண்வெளித் துறை கண்காட்சியின்போது தெரிவித்தார். ஜேடிசி நிறுவனமும் அதன் பங்காளிகளும் ஏற்பாடு செய்துள்ள இந்தக் கண்காட்சியின்போது பேசிய அவர், விமானத்துறை காலப்போக்கில் மீண்டு வரும் என்றும் விண்வெளித் துறை துறைக்கான நீண்ட கால எதிர்காலம் ஒளிமயமாக இருப்பதாக அவர் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!