தெளிவை நாடும் கடைத்தொகுதிகள்

புதிய கொவிட்-19 விதி­மு­றை­கள் தொடர்­பாக கடைத்­தொ­கு­தி­கள் கூடு­தல் தக­வல்­களை நாடு­கின்­றன.

அண்­மை­யில் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்ட அணு­கு­மு­றை­யைப் பற்றி நன்கு புரிந்­து­கொண்டு அதன்­படி செயல்­படும் நோக்­கு­டன் கடைத்­தொ­கு­தி­யில் உள்ள வர்த்­த­கங்­கள் தெளி­வான விவ­ரங்­க­ளைக்

கேட்­ட­றிந்­து­கொள்­ளும் முயற்­சி­யில் இறங்­கி­யுள்­ளன.

தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­தோர் நாளை முதல் கடைத்­

தொ­கு­தி­க­ளுக்­குச் செல்ல முடி­யாது. இது­தொ­டர்­பான விவ­ரங்­க­ளைப் பற்றி அறிந்­து­கொள்ள கடைத்­

தொ­கு­தி­களில் செயல்­படும் வர்த்­த­கங்­கள் மிகுந்த ஆவ­லு­டன் உள்­ளன.

தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளாத ஊழி­யர்­கள் கொவிட்-19 பரி­சோ­த­னைக்கு உட்­பட்­டால் தொடர்ந்து கடைத்­தொ­கு­தி­களில் வேலை செய்ய அனு­ம­திக்­கப்­ப­டு­வார்­களா என்ற கேள்­வியை இந்த வர்த்­த­கங்­கள் எழுப்­பி­யுள்­ளன.

நாளை முதல் கடைத்­தொ­கு­தி­

க­ளுக்­கும் பேரங்­காடி இல்­லாப் பெரிய கடை­க­ளுக்­கும் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­தோர் செல்ல முடி­யாது என்று அர­சாங்­கம் அறி­வித்­துள்­ளது. இருப்­பி­னும், தடுப்­பூசி போட்டுக்கொள்­ளா­த­போ­தி­லும் கொவிட்-19 கிரு­மித்­தொற்று ஏற்­பட்டு குண­ம­டைந்­தோ­ரும் 12 வய­தும் அதற்­கும் குறை­வான சிறு­வர்­களும், பரி­சோ­தனை செய்து கிரு­மித்­தொற்று இல்லை என்று உறுதி செய்­யப்­பட்­ட­வர்­களும் கடைத்­

தொ­கு­தி­க­ளுக்­குச் செல்­ல­லாம் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

எத்­த­கைய பரி­சோ­தனை முறை­கள் ஏற்­றுக்­கொள்­ளப்­படும் என்ற சந்­தே­க­மும் எழுந்­துள்­ளது.

நாளை புதிய விதி­மு­றை­கள் நடப்­புக்கு வரு­வ­தற்கு முன்பு கூடு­தல் விவ­ரங்­கள் கொண்ட சுற்­ற­றிக்கை வெளி­யி­டப்­படும் என்று அர­சாங்­கம் நேற்று முன்­தி­னம் தெரி­வித்­தது.

அது­மட்­டு­மல்­லாது, புதிய விதி­மு­றை­க­ளுக்­குக் கடைத்­தொ­கு­தி­கள் முழு­மை­யாக உட்­பட்டு நடப்­ப­தற்கு முன்பு நாளை­யி­லி­ருந்து ஒரு வார கால அவ­கா­சம் வழங்­கப்­படும் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

புதிய விதி­மு­றை­கள் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­த­வர்­க­ளைப் பாது­காக்­கும் என்று சுகா­தார அமைச்சு கடந்த சனிக்­கி­ழ­மை­யன்று தெரி­வித்­தது.

அதன்­மூ­லம் சிங்­கப்­பூ­ரில் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புத் துறைக்கு ஏற்­பட்­டுள்ள அழுத்­தம் குறை­யும் என்று அது கூறி­யது.

கடந்த வாரம் தொடர்ந்து ஐந்து நாட்­க­ளுக்கு அன்­றாட கொவிட்-19 பாதிப்பு 3,000ஐ கடந்த பிறகு புதிய விதி­முறை அறி­விக்­கப்­பட்­டது.

புதிய விதி­முறை குறித்து வர்த்­த­கங்­கள் கவலை தெரி­வித்­துள்­ளன.

உதா­ர­ணத்­துக்கு, கர்ப்­பிணி­களை அதி­கம் நம்­பி­யி­ருக்­கும் வர்த்­த­கங்­கள் கடு­மை­யா­கப் பாதிக்­கப்­ப­டக்­கூ­டும் என்று அஞ்­சப்­ப­டு­கிறது. கர்ப்­பி­ணி­களில் பெரும்­பா­லா­னோர் தடுப்­பூசி போட்­டு­தக்­கொள்­ளா­ததே இதற்­குக் கார­ணம்.

தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­தோ­ருக்கு விதிக்­கப்­பட்­டுள்ள கட்­டுப்­பா­டு­க­ளால் வியா­பா­ரம் குறை­யும் என்று வர்த்­த­கர்­கள் கவலை தெரி­வித்­த­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!