இல்லவாசிகளில் பலருக்கு கொவிட்-19 அறிகுறி இல்லை

மெத்­த­டிஸ்ட் நல்­வாழ்­வுச் சேவை­

க­ளின் கிறிஸ்­ட­லைட் மெத்­த­டிஸ்ட் இல்­லத்­தில் கொவிட்-19 பாதிப்பு ஏற்­பட்­டுள்­ளது. கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்ட இல்­ல­வா­சி­கள் மருத்­து­வ­ம­னை­க­ளி­லும் சமூ­கப் பரா­ம­ரிப்பு நிலை­யங்­க­ளி­லும் குண­ம­டைந்து வரு­வ­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

பாதிக்­கப்­பட்ட ஊழி­யர்­கள் அர­சாங்­கத்­துக்­குச் சொந்­த­மான தனி­மைப்­ப­டுத்­தும் நிலை­யங்­களில் குண­ம­டைந்து வரு­வ­தாக இல்­லத்­தின் செய்­தித்­தொ­டர்­பா­ளர் தெரி­வித்­தார்.

கடந்த சனிக்­கி­ழமை நில­வ­ரப்­படி அந்த இல்­லத்­தில் 91 பேருக்­குக் கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டி­ருப்­ப­தாக சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

அவர்­களில் 84 பேர் இல்­ல­வா­சி­கள், ஏழு பேர் ஊழி­யர்­கள். இல்­லத்­தில் இருந்த ஒரு­வ­ருக்கு கொவிட்-19 கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டது முதன்­மு­த­லில் கடந்த செப்­டம்­பர் மாதம் 27ஆம் தேதி­யன்று தெரி­ய­வந்­தது.

பாதிக்­கப்­பட்ட பெரும்­பா­லான இல்­ல­வா­சி­க­ளுக்­கும் ஊழி­யர்­க­ளுக்­கும் அறி­கு­றி­கள் ஏதும் இல்லை அல்­லது இலே­சான அறி­கு­றி­கள் மட்­டும் இருப்­ப­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

இதற்கு முன்பு பகல் நேரத்­தில் வெளியே செல்ல அனு­ம­திக்­கப்­பட்ட இல்­ல­வா­சி­க­ளுக்கு கடந்த ஜூன் மாதம் 18ஆம் தேதி­யி­லி­ருந்து வேலை நிமித்­தம் வெளியே செல்ல தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

இல்­ல­வா­சி­கள் தனிப்­பட்ட முறை­யில் வெளியே செல்­வ­தும் கடந்த மே மாதம் 8ஆம் தேதி­யி­லி­ருந்து தற்­கா­லி­க­மாக நிறுத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ளது. கடந்த மாதம் 13ஆம் தேதி­யி­லி­ருந்து இல்­லத்­துக்­குச் செல்ல விருந்­தி­னர்­க­ளுக்கு அனு­மதி இல்லை.

புதிய இல்­ல­வா­சி­களை ஏற்­றுக்­கொள்­வது தற்­கா­லி­க­மாக நிறுத்தி­ வைக்­கப்­பட்­டுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!