250 பேரை வேலைக்கு எடுக்கும் பிரபல நிறுவனம்

விமான செயல்­முறை இயந்­தி­ரங்­களை உற்­பத்தி செய்­யும் 'பிராட் அண்ட் விட்னி' நிறு­வ­னம் இவ்­வாண்­டி­று­திக்­குள் 250 பேரை வேலைக்கு எடுக்­க­வுள்­ளது. விமான, விண்­வெ­ளித் துறை படிப்­ப­டி­யாக மீண்டு வரு­வ­தற்கு இது ஓர் அறி­கு­றி­யா­கப் பார்க்­கப்­படு­கிறது.

அமெ­ரிக்க நிறு­வ­ன­மான 'பிராட் அண்ட் விட்னி' சிங்­கப்­பூ­ரில் ஆறு கிளை­களை இயக்­கு­கிறது. கொவிட்-19 சூழ­லால் ஏற்­பட்ட நெருக்­க­டி­யின் கார­ண­மாக சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவற்­றில் ஐந்­தில் வேலை செய்த 400 ஊழியர்­களை நிறு­வ­னம் ஆட்­கு­றைப்பு செய்­தது. அந்­நி­று­வ­னம் சிங்­கப்­பூரில் 2,000 ஊழி­யர்­களை வேலைக்கு வைத்­தி­ருந்­தது.

கடந்த சில மாதங்­க­ளாகவே புதிய ஊழி­யர்­களை வேலைக்கு எடுக்­கத் தொடங்­கி­விட்­ட­தாக அந்நிறு­வ­னத்­தின் ஆசிய பசிபிக் கிளைகளின் பிரிவுத் துணைத் தலை­வரான திரு டிம் கோர்­மி­யர் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­ஸி­டம் தெரி­வித்­தார். புதி­தாக வேலைக்கு எடுக்­கப்­ப­டு­வோ­ரில் பெரும்­பா­லோ­ருக்­குக் குறிப்­பிட்ட தொகை சம்­ப­ள­மாக வழங்­கப்­ப­டாது, பணி­யில் இருக்­கும் ஒவ்­வொரு மணி­நே­ரத்­துக்­கும் ஊதி­யம் வழங்கப்­படும்.

நிர்­ண­யிக்­கப்­பட்ட சம்­ப­ளம் பெறும் பட்­டக்­கல்வி பயின்­றோர், பட்­ட­யக் கல்வி பெற்­ற­வர்­கள் ஆகி­யோ­ரும் அவர்­க­ளு­டன் சேர்ந்து வேலை செய்­வர் எனத் தெரிவிக்கப்பட்டது.

ஆட்­கு­றைப்பு செய்­யப்­பட்­டோர் விட்­டுச் சென்ற பொறுப்­பு­களை புதி­தாக வேலைக்கு எடுக்­கப்­படுவோர் நிறை­வேற்­று­வரா அல்­லது அவர்­க­ளுக்­குப் புதிய பொறுப்­பு­கள் வழங்­கப்­ப­டுமா எனக் கேட்­கப்­பட்டது. புதிய ஊழி­யர்­கள் இரண்டை­யும் செய்­வர் எனத் திரு கோர்­மி­யர் கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!