பருவநிலை பாதிப்பில்லாத பொருளியல்: நிறுவனங்களின் பங்களிப்பு முக்கியம்

குறைந்த கரி­ய­மி­ல­வாயு வெளி­யேற்­றத்­தை­யும் பரு­வ­நி­லை பாதிப்பில்லாத பொரு­ளி­ய­லை­யும் நோக்­கிய சிங்­கப்­பூ­ரின் பய­ணத்­தில் தனி­யார் நிறு­வ­னங்­க­ளுக்­குப் பெரிய பொறுப்பு உண்டு என நீடித்த நிலைத்­தன்மை, சுற்­றுப்­புற அமைச்­சர்   நேற்று கூறி­னார்.

பரு­வ­நிலை மாற்­றம் ஏற்­ப­டுத்­தும் சவால்­களை வர்த்­த­கங்­கள் எதிர்­கொள்ள வேண்­டும் என்­றும் அமைச்­சர் கூறி­னார்.

'பெரு­நி­று­வ­னங்­கள் ஆளுமை வாரம்' எனும் நிகழ்ச்­சி­யில் பேசிய அமைச்­சர் பரு­வ­நிலை நட­வ­டிக்­கை­யால் சில துறை­கள் அழிந்­தா­லும் புதி­யவை தலை­தூக்­கும் என்­றார். உதா­ர­ணத்­துக்கு, இயற்கை வளங்­கள் குறை­யும்­போது வாகனத்துறை பாதிப்­படை­ ய­க்கூ­டும் என அவர் சுட்­டி­னார்.

மெய்­நி­கர் வாயி­லாக நிகழ்ந்த இந்­நி­கழ்ச்­சியை 'சியாஸ்' எனப்படும் பத்திர முதலீட்டுச் சங்கம் ஏற்­பாடு செய்­திருந்தது.

'சியாஸ்'சின் தலைமை நிர்­வாக அதி­கா­ரி­யும் அதி­ப­ரு­மான டேவிட் ஜெரால்ட் நிறு­வ­னங்­களை, நீடித்த நிலைத்­தன்­மையை தங்­க­ளது நிர்­வா­கத்­தில் ஏற்­றுக்­கொண்டு, நீண்டகால வளர்ச்­சி­யில் கவ­னம் செலுத்­து­மாறு கேட்­டுக்­கொண்­டார்.

மேலும், இது சுற்­றுப்­பு­றத்­தில் நல்ல தாக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வ­தோடு நிறு­வ­னத்­தின் மீளும்­திறனை­யும் வளர்க்­கும் என்று திரு ஜெரால்ட் விளக்­கி­னார்.

தகு­தி­வாய்ந்த பெண்­க­ளுக்கு அதி­க­மான தலைமைப் பொறுப்­பு­கள் வழங்­கப்­ப­டும்­போது பெண்­களின் தேவை­கள் பூர்த்தி செய்யப் படுகின்றன என்­றார் அமைச்­சர்.

சிங்­கப்­பூ­ர் ஊழி­யரணியின் வளர்ச்சி குறை­யக் குறைய, ஆணோ பெண்ணோ, ஒவ்­வோர் ஊழி­ய­ரும் முக்­கி­ய­மா­ன­வர் என்று விளக்­கி­னார் திரு­வாட்டி ஃபூ.

100 நிறு­வ­னங்­க­ளைச் சேர்ந்த 600க்கும் மேற்­பட்­டோர் இந்த­நிகழ்ச்சியில் கலந்­து­கொண்­ட­னர். அடுத்த திங்­கள் வரை இந்நிகழ்ச்சி நடைபெறும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!