தடுப்பூசி நிலையை கடைக்காரர்கள் பரிசோதிப்பர்

புதிய கொவிட்-19 விதி­மு­றை­க­ளின்­படி இன்று முதல் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­த­வர்­கள் உண­வங்­காடி நிலை­யங்­க­ளி­லும் காப்­பிக்­

க­டை­க­ளி­லும் உண­வ­ருந்த முடி­யாது. இந்த விதி­மு­றையை நடை­மு­றைப்­ப­டுத்த புதிய அணு­கு­முறை ஒன்று கையா­ளப்­படும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

உண­வங்­காடி நிலை­யங்­க­ளுக்­குள் செல்ல தனிப்­பட்ட நுழை­

வா­யில் தேவை­யில்லை என்­றும் அவற்­றைச் சுற்றி தடுப்­பு­களை அமைக்­க­வும் தேவை­யில்லை என்­றும் நீடித்த நிலைத்­தன்மை, சுற்­றுப்­புற அமைச்­சர் கிரேஸ் ஃபூ நேற்று தெரி­வித்­தார். தனிப்­பட்ட நுழை­வா­யில்­களை அமைத்து அங்கு ஒரு­வ­ரைப் பணி­யில் நிறுத்­து­வது சவால்­மிக்­கது என்­றார் திரு­வாட்டி ஃபூ. சிங்­கப்­பூ­ரில் 100க்கும் மேற்­பட்ட உண­வங்­காடி நிலை­யங்­களும் காப்­பிக்­க­டை­களும் இருப்­பதை அவர் சுட்­டி­னார். ஒவ்­வோர் உண­வங்­காடி நிலை­ய­மும் காப்­பிக்­க­டை­யும் வெவ்­வேறு வடி­வ­மைப்­பை­யும் இயக்க முறை­யை­யும் கொண்­டி­ருப்­ப­தால் தனிப்­பட்ட நுழை­வா­யில்­களை அமைத்து அங்கு ஒரு­வ­ரைப் பணி­யில் நிறுத்­து­வது நடை­மு­றைக்­குச் சரி­யா­காது என்று அமைச்­சர் ஃபூ கூறி­னார்.

மாறாக, உண­வங்­காடி நிலை­யங்­கள், காப்­பிக்­க­டை­க­ளுக்கு வரும் வாடிக்­கை­யா­ளர்­கள் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வர்­களா அல்­லது போட்­டுக்­கொள்­ளா­த­வர்­களா என்­பதை அங்­குள்ள கடைக்­கா­ரர்­கள் பரி­சோ­திப்­பர் என்று அமைச்­சர் ஃபூ தெரி­வித்­தார்.

தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­தோர் வந்­தால் அவர்­கள் அங்கு உண­வ­ருந்த முடி­யாது என்­பதை கடைக்­கா­ரர்­கள் நினை­வூட்­டு­வர் என்­றார் திரு­வாட்டி ஃபூ.

புதிய விதி­மு­றை­யின்­படி தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­த­வர்­கள் உண­வங்­காடி நிலை­யங்­கள், காப்­பிக்­க­டை­க­ளி­லி­ருந்து உணவை வாங்கிச் செல்ல மட்­டுமே அனு­ம­திக்­கப்­ப­டு­வர். புதிய விதி­மு­றை­கள் கடைப்­பி­டிக்­கப்­ப­டு­கின்­ற­னவா என்­பதை உறுதி செய்ய அர­சாங்க அதி­கா­ரி­கள் அதி­ர­டிச் சோத­னை­களை நடத்­து­வர்.

"உண­வங்­காடி நிலை­யங்­கள், காப்­பிக்­க­டை­கள் ஆகிய இடங்­களில் எங்­கள் அம­லாக்­கக் குழு­வி­னர் அதி­ர­டிச் சோதனை நடத்­து­வர். அங்கு அவர்­கள் வாடிக்­கை­யா­ளர்­கள் சில­ரின் தடுப்­பூசி நிலை­யைப் பரி­சோ­திப்­பர். தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­த­வர்­கள் அங்கு உண­வ­ருந்­திக்­கொண்­டி­ருந்­தால் அவர்­க­ளுக்கு அறி­வுரை கூறப்­படும். பிறகு அவர்­க­ளது பெயர்­களை அதி­கா­ரி­கள் குறித்­துக்­கொள்­வர். தொடர்ந்து விதி­மு­றை­களை மீறி­னால், வேறு வழி­யில்லை, அவர்­

க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுத்து அப­ரா­தம் விதிக்க வேண்டி வரும்," என்று திரு­வாட்டி ஃபூ கூறி­னார். தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­த­வர்­கள் பலர் அமர்ந்து உண­வ­ருந்­து­வ­தா­கத் தக­வல் கிடைத்­தால் காப்­பிக்­க­டை­க­ளி­லும் உண­வங்­காடி நிலை­யங்­க­ளி­லும் குறிப்­பிட்ட நேரத்­தில் அதி­கா­ரி­கள் சோதனை நடத்­தக்­கூ­டும்.

"பொது இடங்­களில் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளாத மூத்­தோர் மற்­ற­வர்­க­ளைச் சந்­தித்­துப் பேசு­

வ­தைத் தடுக்க இந்த நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­ப­டு­கின்­றன. கடு­மை­யான நோய்­க­ளி­லி­ருந்து அவர்­

க­ளைப் பாது­காக்க இவ்­வாறு செய்­கி­றோம்," என அமைச்­சர் ஃபூ வலி­யு­றுத்­தி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!