கொவிட்-19 விதிமுறை: சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்த அமைச்சர்கள்

புதிய கொவிட்-19 விதி­மு­றை­கள் தொடர்­பான சந்­தே­கங்­க­ளுக்­கு நிதி அமைச்­சர் லாரன்ஸ் வோங், சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் ஆகி­யோர் ஃபேஸ்புக் பக்­கத்­தில் பதி­வேற்­றம் செய்­யப்­பட்ட காணொளி மூலம் விளக்­கம் அளித்­துள்­ள­னர்.

இரு­வ­ரும் கொவிட்-19 கிரு­மித்­தொற்­றுக்கு எதி­ரான அமைச்சுகள்­நிலை பணிக்­கு­ழு­வுக்­குத் தலைமை­ தாங்­கு­கின்­ற­னர்.

பூஸ்­டர் தடுப்­பூசி போட்­டுக்­கொள்ளத் தகுதி பெறு­ப­வர்­கள் அதை ஏன் போட்­டுக்­கொள்ள வேண்­டும், கொவிட்-19 கிரு­மித்­தொற்­றைக் கண்டு அச்­ச­ம­டை­யத் தேவை­யில்லை என்று அர­சாங்­கம் தெரி­வித்­த­போ­தி­லும் கடு­மை­யான கட்­டுப்­பா­டு­கள் ஏன் தேவைப்­ப­டு­கின்­றன என்பன போன்ற கேள்­வி­க­ளுக்கு அமைச்­சர்­கள் பதி­ல­ளித்­த­னர்.

புதிய விதி­மு­றை­கள் நடப்­புக்கு வந்­த­தும் கடைத்­தொ­கு­தி­களில் இருக்­கும் மருந்­த­கங்­கள், பல்மருந்­த­கங்­கள் ஆகி­ய­வற்­றுக்கு தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­தோர் தொடர்ந்து செல்­ல­லாம் என்று அவர்­கள் கூறி­னர்.

புதிய விதி­மு­றை­யின்­­படி தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­த­வர்­கள் கடைத்­தொ­கு­தி­க­ளுக்­குச் செல்­லக்­கூ­டாது.

புதிய நடை­மு­றை­யு­டன் பழக்­கப்­ப­டுத்­திக்­கொள்ள கடைத்­

தொ­கு­தி­க­ளுக்கு இன்று முதல் இம்­மா­தம் 19ஆம் தேதி வரை ஒரு வார கால அவ­கா­சம் வழங்­கப்­பட்­டுள்­ளது.

தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­த­வர்­க­ளுக்­குக் கடு­மை­யான கட்­டுப்­பா­டு­கள் விதிக்­கப்­பட்­ட­தற்­கான கார­ணம் குறித்து அமைச்­சர்­கள் விளக்­க­ம­ளித்­த­னர்.

"தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­த­வர்­கள் கூடு­தல் ஆபத்தை எதிர்­நோக்­கு­வ­தால் அவர்­க­ளைப் பாது­காக்க கடு­மை­யான கட்­டுப்­பா­டு­களை நடை­மு­றைப்­ப­டுத்­தி­யுள்­ளோம். மக்­கள்­தொ­கை­யில் 1.5 விழுக்­காட்­டி­னர் மட்­டுமே தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ள­வில்லை. ஆனால் கொவிட்-19 கிரு­மித்­தொற்­றால் கடு­மை­யா­கப் பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் அல்­லது மாண்­ட­வர்­களில் பெரும்­பா­லா­னோர் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­த­வர்­கள் என்­பதை நினை­வில் வைத்­துக்­கொள்­ள­வேண்­டும்,"

என்று அமைச்­சர் வோங் கூறி­னார்.

"நீங்­கள் இளை­ய­ராக இருந்­தா­லும் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­த­வ­ராக இருந்­தால் மெத்­த­ன­மாக இருந்­து­வி­டக்­கூ­டாது," என்­றார் அமைச்­சர் ஓங்.

தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளாத பெற்­றோர், தங்­கள் பிள்­ளை­க­ளைக் கடைத்­தொ­கு­தி­களில் உள்ள குழந்­தைப் பரா­ம­ரிப்பு நிலை­யங்­க­ளுக்கு அழைத்­துச் செல்­ல­லாமா என்று அமைச்­சர்­க­ளி­டம் கேள்வி எழுப்­பப்­பட்­டது. அத்­த­கைய சூழ்­நி­லை­களில் நீக்­குப்­போக்­குத் தன்மை கடைப்­பி­டிக்­கப்­படும் என்­றார் திரு வோங். காப்­பிக்­க­டை­க­ளி­லும், உண­வங்­காடி நிலை­யங்­க­ளி­லும் புதிய விதி­மு­றை­கள் எவ்­வாறு நடை­

மு­றைப்­ப­டுத்­தப்­படும் என்­றும் கேள்வி கேட்­கப்­பட்­டது.

புதிய விதி­மு­றைக்கு உட்­பட்டு காப்­பிக்­கடை உரி­மை­யா­ளர்­கள் நடந்­து­கொள்­வார்­கள் என எதிர்­பார்ப்­ப­தாக திரு வோங் பதி­ல­ளித்­தார். காப்­பிக்­க­டை­க­ளி­லும் உண­வங்­காடி நிலை­யங்­க­ளி­லும் அதி­ர­டிச் சோத­னை­களை அர­சாங்­கம் நடத்­தும் என்­றார் அவர்.

"நாம் அனை­வ­ரும் பொறுப்­பு­டன் இருந்து பங்­காற்ற வேண்­டும்," என்று அமைச்­சர் வோங்

வலி­யு­றுத்­தி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!