உத்தரவை ரத்து செய்யுமாறு கேட்ட மனு நிராகரிப்பு

டுவிட்­ட­ரில் வெளி­யான செய்தி ஒன்­றின் தொடர்­பில் அக்­டோ­பர் மாதம் 8ஆம் தேதி பிறப்­பிக்­கப்­பட்ட திருத்த உத்­த­ரவு ஒன்றை ரத்து செய்­யும்­படி அல்லது மாற்­றும்­படி ஜோல­வன் வாம் என்­ப­வர் தாக்­கல் செய்த விண்­ணப்­பத்தை உள்­துறை அமைச்சு நிரா­க­ரித்­து­விட்­டது.

அந்த உத்­த­ரவை பிறப்­பிப்­பதற்­கான நில­வ­ரங்­கள் பொருத்­த­மா­ன­வை­யாக இருக்­கின்­றன. அதை ரத்து செய்­வ­தற்­கான கார­ணம் எது­வும் மனு­வில் குறிப்­பி­டப்­ப­ட­வில்லை என்று அமைச்சு அந்த விண்­ணப்­பம் தொடர்­பில் கருத்து தெரி­வித்­தது.

விண்­ணப்­பத்தை மிகக் கவ­ன­மாக பரி­சீ­லித்­ததை அடுத்து அதை நிரா­க­ரிப்­பது என்று உள்­துறை அமைச்­சர் முடிவு செய்து இருக்­கி­றார். இது­பற்றி ஜோல­வன் வாமி­டம் தெரி­விக்­கப்­பட்டு இருக்­கிறது.

டுவிட்­ட­ரில் அக்­டோ­பர் 6ஆம் தேதி வெளி­யி­டப்­பட்ட திரு வாமின் பதி­வில் இருந்த தக­வல்­க­ளைச் சரிப்­ப­டுத்­தும்­படி உத்­த­ரவு பிறப்­பிக்­கும்­படி இணை­ய­வழி பொய்ச் செய்­திக்­கும் சூழ்ச்­சித் திறத்­திற்­கும் எதி­ரான பாது­காப்­புச் சட்ட (போஃப்மா) அலு­வ­ல­கத்தை உள்­துறை அமைச்சு கேட்­டுக்­கொண்­டது.

சட்ட அடிப்படையிலான ஆட்சி சிங்­கப்­பூர் உட்­பட உண்­மை­யான உல­கில் எந்­த­வொரு இடத்­தி­லும் செயல்­ப­டு­வ­தில்லை என்ற கருத்தை உள்­துறை அமைச்சர் கா சண்­மு­கம் கொண்­டி­ருக்­கி­றார் என்ற தவ­றான செய்­தியை திரு வாமின் டுவிட்­டர் செய்தி தெரி­வித்­தது.

இதை சரிப்­ப­டுத்தி அறிக்கை ஒன்றை தனது இணை­யத் தளத்­தில் வெளி­யி­டும்­படி திரு வாம் கேட்­டுக்­கொள்­ளப்­பட்­டார். ஆனால் அவர் அவ்­வாறு செய்­ய­வில்லை.

ஜோல­வன் வாம். ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கோப்புப்படம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!