இரு பாதுகாவல் நிறுவனங்கள் மீது குற்றச்சாட்டுகள்

பாது­கா­வல் அதி­கா­ரி­களை 17 முதல் 20 மணி­நே­ரத்­திற்­குத் தொடர்ந்து வேலை பார்க்க வைத்­த­தாக இரண்டு தனி­யார் பாது­காவல் நிறு­வ­னங்­கள் மீது குற்­றம் சாட்­டப்­பட்­டுள்­ளது.

வேலை நிய­ம­னச் சட்­டத்­தின் கீழ் 'இர­வான் செக்­யூ­ரிட்டி செர்­வி­சஸ்', 'வொலாண்ட்ரா செக்­யூரிட்டி' ஆகிய இரு நிறு­வ­னங்­கள் மீது நேற்று குற்­றம் சாட்­டப்­பட்­டது.

தங்­க­ள் அதி­கா­ரி­களை இவ்­வாண்டு பிப்­ர­வரி, மார்ச் மாதங்­களில் பல­முறை 12 மணி நேரத்­திற்கு மேல் தொடர்ந்து வேலை பார்க்க வைத்­த­தற்­காக இந்நிறு­வ­னங்­கள் குற்­றச்­சாட்­டு­களை எதிர்­நோக்கு­கின்­றன.

'இர­வான்' மீது இரண்­டும் 'வொலாண்ட்ரா' மீது மூன்று குற்­றச்­சாட்­டு­களும் பதி­வா­கி­யுள்­ளன.

வேலை நேரம், கூடு­தல் நேர வேலைக்­கான வரம்பு போன்­ற­வற்­றின் தொடர்­பில் கிட்­டத்­தட்ட 200 தனி­யார் பாது­கா­வல் நிறு­வ­னங்­களை ஏப்­ரல் முதல் ஆகஸ்ட் வரை மனி­த­வள அமைச்சு சோத­னை­யிட்­டது.

அதில் குறைந்­தது 33% நிறு­வனங்­களில் விதி­மீ­றல் கண்­டு­பிடிக்­கப்­பட்­டது.

பெரும்­பா­லா­னவை சிறு­சிறு விதி­மீ­ற­லாக இருந்­தா­லும் வேலை நேர வரம்பை மீறி­ய­தற்­காக 15 நிறு­வ­னங்­கள் மீது நட­வ­டிக்கை எடுக்­கும் என்று அமைச்சு குறிப்­பிட்­டது.

மனி­த­வள அமைச்சு நேற்று வெளி­யிட்ட அறிக்­கை­யில், 'இர­வான்', 'வொலாண்ட்ரா' நிறு­வனங்­க­ளைச் சேர்ந்த பாது­கா­வல் அதி­கா­ரி­கள், தொடர்ச்­சி­யாக 'ஷிஃப்ட்' வேலை செய்­தி­ருந்­தது விசா­ர­ணை­யில் தெரியவந்­த­தாக குறிப்­பி­டப்­பட்­டது.

'பாது­கா­வல் முத்­த­ரப்­புக் குழு­மம்' 2013ஆம் ஆண்­டில் அமைக்­கப்­பட்­ட­தி­லி­ருந்து, ஏறத்­தாழ 50,000 பாது­கா­வல் அதி­கா­ரி­க­ளின் ஊதி­யத்­தை­யும் நல­னை­யும் மேம்­ப­டுத்­தும் நோக்­கில் பங்­காளி அமைப்­பு­கள் செயல்­பட்டு வரு­வ­தா­க­வும் அமைச்சு தெரி­வித்­தது.

தொழிற்­சங்­கங்­கள், முத­லா­ளி­கள், சேவை பெறும் வாடிக்­கை­யா­ளர்­கள், அர­சாங்­கம் போன்ற பல தரப்பு பிர­தி­நி­தி­க­ளைக் கொண்­ட­து­தான் இக்­கு­ழு­மம். பாது­கா­வல் துறைக்கு கூடு­தல் வேலை நேர வரம்­பி­லி­ருந்து விலக்கு அளிப்­பதை இவ்­வாண்டு ஜன­வரி மாதம் முதல் அகற்­று­மாறு 2017ல் குழு­மம் பரிந்­துரை செய்­தி­ருந்­தது.

அதை அர­சாங்­க­மும் ஏற்­றுக்­கொண்­டது. இதன்­படி, மாதத்­தில் கூடு­தல் வேலை செய்­வ­தற்கு 72 மணி நேரத்­திற்கு மேல் பாது­காவல் பிரி­வி­னர் போக முடி­யாது.

ஊழி­யர்­க­ளின் நலன் காக்­கப்­படு­வ­தில் அமைச்சு கடப்­பாடு கொண்­டுள்­ள­தாக அமைச்சு குறிப்­பிட்­டது.

பாதுகாவல் ஊழியர்கள் தங்கள் உரி­மை­க­ள் பற்றி அறிந்­தி­ருப்­பது தொடர்­பில் விழிப்­பு­ணர்வு ஏற்­ப­டுத்­தும் அதே­வே­ளை­யில், தளங்­களில் அடிக்­கடி சோத­னைப் பணி­கள் மேற்­கொண்டு சட்­டத்தை மீறும் நிறு­வ­னங்­கள் மீது கடு­மை­யான நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்­றும் கூறப்­பட்­டது.

இத்­த­கைய விதி­மீ­றல் குறித்த தக­வல்­கள் இருந்­தால், இவ்­வி­வ­கா­ரத்தை மனி­த­வள அமைச்­சி­டம் புகார் செய்­யு­மாறு கேட்­டுக்­கொள்­ளப்­ப­டு­கிறது. அமைச்­சின் இணை­யப்­பக்­கம் வாயி­லாக புகா­ரைச் சமர்ப்­பிக்­க­லாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!