இளையர்களின் மனநலனில் அரசு இடைவிடா கவனம் அமைச்சர்: வேறுபட்ட மனநல சவால்களை எதிர்நோக்கும் இப்போதைய இளையர்கள்

இன்­றைய இளை­யர்­கள் வேறு­பட்ட மனநல சவால்­களை எதிர்­நோக்கு­கி­றார்­கள் என்­பது வெளிப்படையான ஒன்று என்று சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் தெரி­வித்­துள்­ளார்.

அர­சாங்­கம் இந்­தப் பிரச்­சினைக்குத் தீர்வு காண விரும்­பும் பட்­சத்­தில் இது ஓர் ஆழ­மான பிரச்­சினை என்­பதை அவசியம் அது அங்­கீ­ரிக்­க­வேண்­டும் என்று அவர் கூறி இருக்­கி­றார்.

அரசு ஆத­ரவு பெற்ற இளை­யர் மன­நலக் கட்­ட­மைப்பு என்ற இயக்­கத்­தின்கீழ் இடம்­பெ­றும் ஒரு சமூக ஆத­ரவு செயல்­திட்ட ஏற்­பாட்­டில் இடம்­பெற்ற நேரடி விவா­திப்பு நிகழ்ச்­சி­யில் அமைச்­சர் கலந்­து­கொண்­டார். அது ஃபேஸ்புக்­கில் நேர­டி­யாக ஒளி­ப­ரப்­பப்­பட்­டது.

இளை­யர்­கள் தாராள சிந்­தனை உள்­ள­வர்­க­ளாக, போராட்ட குண முள்ள­வர்­க­ளாக இருக்கிறார்கள் என்று கூறப்­ப­டு­வது உல­கம் முழு­வ­துமே உள்ள இளை­யர்­க­ளைப் பொறுத்­த­வரை உண்­மை­யாக இருக்­கிறது என்றார் அமைச்­சர்.

இருந்­தா­லும் மன­ந­லம் என்று வரும்­போது இந்­தத் தலை­மு­றை­யைப் பார்க்­கை­யில் ஏதோ மாற்­றம் காணப்­படுவதாக திரு ஓங் குறிப்­பிட்­டார்.

இளை­ய­ரி­டையே மனநலப் பிரச்­சி­னை­கள் அதி­க­ரித்து இருக்­கிறது என்­பது உலக சுகா­தார நிறு­வ­னம் உள்­ளிட்ட உல­கம் முழு­வ­தை­யும் சேரந்த புள்­ளி­வி­வ­ரங்­கள் மூலம் தெரி­வ­தா­கக் கூறிய திரு ஓங், கடந்த 10, 20 ஆண்­டு­களில் ஏதோ மாறி இருக்­கிறது என்­பதை ஒப்­புக்­கொள்ள வேண்­டி­யது முக்­கி­ய மானது என்­றார்.

இதுவே சுகா­தார அமைச்­சின் சிந்­த­னை­யில் எப்­போ­துமே இருந்து வரு­கிறது என்றும் அமைச்சர் குறிப்­பிட்டார்.

சுகா­தார மூத்த துணை அமைச்­சர் ஜனில் புதுச்­சேரி தலை­மை­யில் அமைந்­துள்ள பல அமைப்­பு­க­ளுக்கு இடை­யி­லான சிறப்­புப் பணிக்­குழு இளை­யர்­க­ளின் கருத்­து­களைச் செவி­ம­டுப்­ப­தில் நாட்­ட­மாக இருக்­கிறது என்­றும் திரு ஓங் தெரி­வித்தார்.

சமு­தாய, குடும்ப மேம்­பாடு, கல்­விக்­கான துணை அமைச்­சர் சுன் ஸுவெ­லிங் நேற்­றைய கலந்­து­ரை­யா­டலை வழி­ந­டத்­தி­னார்.

சமூக ஊட­கம் நல்­ல­வற்றைச் சாதிக்­கக்­கூ­டிய சக்­தி­யாக திகழ முடி­யும் என்று திரு­வாட்டி சுன் குறிப்­பிட்­டார். இருந்­தா­லும் அது பாத­க­மாகப் பயன்­ப­டுத்­தப்­ப­டு­வ­தை­யும் அவர் சுட்­டி­னார்.

இந்­தச் சூழ­லில் கலந்­து­ரை­யா­டல்­களை சமூ­கம் வழக்­க­மாக்க வேண்­டி­யது தேவை­யா­ன­தாக இருக்­கிறது என்­றார் அவர்.

மெய்­நி­கர் உல­கில் தாக்­குப்­பிடித்து நிலைத்­தி­ருக்க தேவை­யான தேர்ச்­சி­களை இளை­யர்­க­ளுக்கு இளம் வய­தி­லி­ருந்தே போதிக்க வேண்­டி­ய­தன் முக்­கி­யத்­து­வத்தை அமைச்­சர் திரு ஓங் வலி­யு­றுத்தி கூறி­னார்.

இன்­றைய இளை­யர்­கள் எதிர்­நோக்­கும் மன­ந­லப் பிரச்­சி­னை­களைப் பொறுத்­த­வரை, ஒளி­வு­மறைவு இல்­லாத நிலை வேண்­டும் என்று திரு ஓங் கோரிக்கை விடுத்­தார். அத்­த­கைய பிரச்­சி­னை­களை அங்­கீ­க­ரிப்­ப­தன் தொடர்­பில் அர­சாங்­கம் தெள்­ளத்தெளி­வான ஒரு நிலையை எடுக்க முடி­யும் என்­பதை­யும் அவர் ஏற்­றுக்­கொண்­டார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!