செய்திக்கொத்து

தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்: கர்ப்பிணிகளுக்கு வலியுறுத்து

சிங்கப்பூரில் கொவிட்-19 தொற்றுக்கு ஆளாகி மருத்துவமனைகளில் சேரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத கர்ப்பிணிகளின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது.

தடுப்பூசி போட்டுக்கொள்ளாத கர்ப்பிணி மாதர்களுக்கு கொவிட்-19 காரணமாக கடுமையான பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் என்பதால் அவர்கள் உடனடியாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று உள்ளூர் பிரசவத் துறை வல்லுநர்களும், தொற்றுநோய் வல்லுநர்களும் இணையக் கருத்தரங்கில் வலியுறுத்தினர்.

ஏறத்தாழ 20 கர்ப்பிணிகள் கொவிட்-19 காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் அவர்களில் ஓரிருவர் மட்டுமே முழுமையான தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் என்றும் அமைச்சிடம் இருந்து வந்த தகவல் கூறியதாக அந்தக் கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.

கொவிட்-19 மரணங்கள் 215

சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19 கார­ண­மாக ஏற்­பட்­டுள்ள மொத்த மரண எண்­ணிக்கை 215 ஆகி இருக்­கிறது. தொற்று காரண­மாக வெள்­ளிக்­கி­ழமை 61 முதல் 89 வரைப்­பட்ட வயது உள்ள எட்டு பேர் மர­ண­ம­டைந்­த­தாக சுகா­தார அமைச்சு தெரி­வித்­தது.

அவர்­களில் ஏழு பேர் ஆட­வர்­கள். அனை­வ­ரும் சிங்­கப்­பூரர்­கள். மூன்று பேர் தடுப்­பூசி போட்­ட­வர்­கள். ஐவர் போடாத­வர்­கள். தடுப்­பூசி போட்­டுக்கொள்­ளாத ஒரு­வ­ரைத் தவிர இதர அனை­வ­ருக்­கும் உடல்நலப் பிரச்­சி­னை­கள் இருந்துவந்­தன. இங்கு கடந்த 28 நாட்­களில் கொரோனா கார­ண­மாக மாண்­ட­வர்­களில் 26.6 விழுக்காட்டினர் முற்­றி­லும் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வர்­கள்.

மற்­ற­வர்­கள் ஓர் ஊசி போட்­டுக்­கொண்­ட­வ­ர்கள் அல்­லது தடுப்­பூசி போடா­த­வர்­கள். கொவிட்-19 தொற்று கார­ண­மாக வெள்­ளிக்­கிழமையுடன் தொடர்ந்து 28 நாட்­க­ளாக மர­ணங்­கள் இடம்­பெற்று வரு­கின்­றன. வெள்­ளிக்­கி­ழமை புதி­தாக 3,445 பேருக்­குத் தொற்று ஏற்­பட்­டது. அவர்­களில் 2,823 பேர் சமூ­கத்­தைச் சேர்ந்­த­வர்­கள். வெளி­நாட்டு ஊழி­யர் தங்­கு­விடுதிகளைச் சேர்ந்­த­வர்­கள் 620 பேர். வெளி­நா­டு­களில் இருந்த வந்த இரண்டு பேருக்குத் தொற்று இருந்­தது.

பொய்த் தகவல்: அமைச்சு விளக்கம்

ஒட்டுண்ணி தொற்றுநோய்களைக் குணப்படுத்த பரிந்துரைக்கப்படும் 'இன்வர்மெக்டின்' என்ற மருந்து, கொவிட்-19க்கு எதிரான சிகிச்சையில் பாதுகாப்பானது, பலன்தரக்கூடியது என்று 'டுரூத் வாரியர்ஸ்' என்ற உள்ளூர் இணையத்தளம் தெரிவித்தது. இது பொய் என்று கூறி சுகாதார அமைச்சு விளக்கம் அளித்துள்ளது.

இன்வர்மெக்டின், மருத்துவர்கள் பரிந்துரையின் பேரில் மட்டும் பயன்படுத்தக்கூடிய மருந்து. அது புழு மூலம் ஏற்படக்கூடிய தொற்றுநோய்க்குச் சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படுகிறது. அது வைரஸ் கிருமிக்கு எதிரான மருந்து அல்ல. கொவிட்-19க்கு எதிராக அதைப் பயன்படுத்த சுகாதார அறிவியல் ஆணையம் அனுமதி வழங்கவில்லை என்பதை அமைச்சு சுட்டிக்காட்டியது.

செம்ப்கார்ப் மன்னிப்புக் கேட்டது

வெஸ்ட்லைட் ஜாலான் துக்காங் விடுதியில் தங்கியிருக்கும் ஊழியர்களிடம் அவர்கள் தெரிவித்த குறைகள் தொடர்பில் செம்ப்கார்ப் மரின் நிறுவனம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு உள்ளது. அந்த ஊழியர்களுடன் சேர்ந்து அவர்களின் குறைகளைக் களைய தான் தொடர்ந்து செயல்படப் போவதாகவும் அது தெரிவித்துள்ளது. அந்த விடுதி ஊழியர்கள், துப்புரவு சரியில்லை என்றும் சாப்பாட்டுத் தரம் குறைவாக இருக்கிறது என்றும் குறை கூறி இருந்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!