கேட்டுப் பெறத் தயங்கவேண்டாம்; உதவி தேவைப்படுவோருக்கு சிண்டா அழைப்பு

உதவி தேவைப்­படும் வசதி குறைந்த இந்­தி­யர்­கள், சிண்டா எனப்­படும் சிங்­கப்­பூர் இந்­தி­யர் மேம்­பாட்­டுச் சங்­கத்­து­டன் தொடர்­பில் தொடர்ந்து இருக்­கும்­ப­டி­யும் உதவி தேவைப்­ப­டும்­போது அத­னைக் கேட்க தயங்­க­வேண்­டாம் என்­றும் தலைமை நிர்­வாக அதி­காரி அன்­ப­ரசு ராஜேந்­தி­ரன் தெரி­வித்­தி­ருக்­கி­றார்.

வரும் தீபா­வ­ளிப் பண்­டி­கையில் வசதி இல்லாதோர், வசதி படைத்தோர் என வேறு­பாடின்றி அனை­வ­ருமே கொண்­டாட்ட உணர்­வில் திளைக்கவேண்டும் என்ற சகோ­த­ரத்­துவ நோக்­கு­டன் சிண்டா தொடர் இயக்­கம் போல செயல்­ப­டு­வ­தாக அவர் கூறி­னார்.

இந்­திய சமூ­கத்­தி­ன­ரின் கல்வி, பொரு­ளா­தார தேவை­க­ளுக்­கான நிதி திரட்­டுத் திட்­ட­மான 'புரோ­ஜெக்ட் கிவ் 2021', நேற்­றும் இன்றும் வசதி குறைந்­தோ­ருக்கு தீபா­வ­ளிப் பல­கா­ரங்­க­ளை­யும் 120 வெள்ளி மதிப்­பி­லான மளி­கைப்­பொ­ருள் பற்­றுச்­சீட்­டு­க­ளை­யும் வழங்­குகிறது.

இவ்­வாண்டு 1,900 குடும்பப் பயனாளர்கள் அன்­ப­ளிப்­புப் பைகளைப் பெறு­கின்­ற­ன.

இந்த எண்­ணிக்கை, கடந்­தாண்­டின் எண்ணிக்­கை­யை­விட 20 விழுக்­காடு அதி­கம் என்று குறிப்­பிட்ட திரு அன்­ப­ரசு, கொவிட்-19 கிருமிப் பர­வ­லால் பல குடும்­பங்­களில் வேலை­யி­ழப்பு நேர்ந்து­விட்­ட­தாக சிண்டா அலு­வ­ல­கத்­தில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் நேற்று பேசி­ய­போது கூறி­னார்.

சிண்­டா­வின் உத­வித் திட்­டத்­தில் இடம்­பெ­று­வோ­ரு­டன் மற்ற அமைப்­பு­க­ளைச் சேர்ந்­த­வர்­க­ளுக்­கும் சிண்டா உத­வு­வ­தா­க­அ­வர் கூறி­னார்.

"அன்­ப­ளிப்­புப் பைகள், பொருள் உதவி மட்­டு­மின்றி இந்­தப் பய­னா­ளர்­க­ளு­டன் தொடர்பை வலுப்­ப­டுத்­தும் கரு­வி­யாக உள்­ளது," என்று திரு அன்­ப­ரசு கூறி­னார்.

ஹோப் அலை­யன்ஸ் இனி­ஷியேட்­டிவ், மத்­திய போதைப்பொருள் ஒழிப்­புப் பிரிவு, சிங்­கப்­பூர் ஜைனர் சம­யச் சங்­கம், சுகா­தார மேம்­பாட்டுக் கழ­கம் ஆகிய அமைப்­பு­கள் இந்­தத் திட்­டத்­துக்கு ஆத­ரவு வழங்­கு­கின்­றன.

ஒவ்­வொரு அன்­ப­ளிப்­புப் பையிலும் பல­கா­ரங்­க­ளு­டன் 'ஓட்ஸ்', 'மைலோ' போன்ற அத்­தியா­வ­சிய உண­வுப் பொருட்­கள் உள்­ளன. பைகளில் சேர்க்­கப்­பட்ட லட்­டுக்­கள், ஜைன சமய விதி­களின்­படி வேர் காய்­க­றி­கள் சேர்க்­கப்­படா­தவை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

இவ்­வாண்­டின் உதவி, மூத்­தோ­ரின் தேவை­கள் மீது கவ­னம் செலுத்தும் என்று கூறிய திரு அன்­ப­ரசு, சிங்­கப்­பூ­ரின் சமூ­கம் மூப்­ப­டை­வ­தால் இதற்­கான அவ­சி­யம் ஏற்­பட்­டுள்­ள­தா­கத் தெரி­வித்­தார்.

"முதி­யோர் பல­ரின் தனி­மையை கொவிட்-19 கிரு­மிப் பர­வல் கடந்த ஆண்டு அதி­க­ரித்­தி­ருக்­கிறது என்றே சொல்­ல­வேண்­டும். வெளிநாட்டில் இருக்கும் பிள்­ளை­கள் அல்­லது உற­வி­னர்­கள் இருந்து இவர்­க­ளைக் காண இய­லா­மல் போக­லாம்.

சிலர் பிள்­ளை­கள் இல்­லாத முதிய தம்பதி­யி­ன­ரா­கவோ அல்­லது ஒற்றை முதி­ய­வ­ரா­கவோ இருக்­க­லாம். கிருமித்­தொற்­றால் சிலர் வீட்­டி­லேயே அடை­பட்­டி­ருப்­பது போன்ற உணர்­வால் அவர்­க­ளுக்கு மன அழுத்­தமும் உடல் உபா­தை­களும் ஏற்­ப­டக்­கூ­டும்," என்று அவர் குறிப்­பிட்­டார்.

தீபா­வ­ளி கால­கட்­டத்­தில் இளைய தொண்­டூ­ழி­யர்­கள் பலர், தனி­மை­யில் இருக்­கும் முதி­யோரை நலம் விசா­ரித்து அவர்­க­ளது வீட்டை அலங்­க­ரிப்­பர் என்று அவர் குறிப்­பிட்­டார்.

'புரோ­ஜெக்ட் கிவ்' திட்­டத்­திற்கு 20 ஆண்­டு­க­ளா­க­வும் அன்­ப­ளிப்­புப் பை திட்­டத்­திற்கு கடந்த ஏழு ஆண்டு­க­ளா­க­வும் தொண்­டாற்­றி­வ­ரும் லிட்­டில் இந்­தியா கடைக்­காரர்­கள் மர­பு­டை­மைச் சங்­கம் இவ்­வாண்­டும் இந்­தப் பணி­யில் ஈடுபடுகிறது என்று மகிழ்ச்­சி­யாக இருப்­ப­தாக அந்த அமைப்­பின் பெண்­கள் பிரிவு தலை­வ­ரான ஜாய்ஸ் கிங்ஸ்லி தெரி­வித்­தார்.

"கொவிட்-19 கிரு­மிப் பரவலுக்கு எதி­ராக சிண்டா செயல்­ப­டுத்­திய முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­கள் எங்­க­ளது நம்­பிக்­கையை அதி­க­ரித்­துள்­ளது," என்று அவர் கூறி­னார்.

சிண்­டா­வின் அன்­ப­ளிப்­புப் பை திட்­டத்­தால் தங்­க­ளது வட்­டா­ரத்­தைச் சேர்ந்த 30 குடும்­பங்­கள் பய­ன­டைந்­தி­ருப்­ப­தாக பூன் லே இந்­திய நற்­பணி செயற்­கு­ழு­வைச் சேர்ந்த அரு­ளா­னந்­தன் தெரி­வித்­தார்.

பல்­லாண்­டு­க­ளாக சிண்டா கொடுத்­து­வந்த புத்­த­கங்­கள் மற்­றும் மடிக்­க­ணினி உத­வி­யு­டன் இந்த தீபா­வளி உதவி வழங்­கப்­ப­டுவது குறித்து வட்­டா­ர­வா­சி­கள் மகிழ்­வதாக அக்­கு­ழு­வின் மற்­றோர் உறுப்­பி­னர் கென்­னடி தெரி­வித்­தார்.கூடுதல் செய்தி: ஜமிலா அக்பர்

கி. ஜனார்த்தனன்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!