பொங்கோல் சென்ட்ரலில் துப்புரவுப் பணியாளர் மரணம்

பொங்­கோ­லில் வீவக புளோக்­ ஒன்றில் குப்பை சேரும் அறை­யில் துப்­பு­ர­வுப் பணி­யா­ளர் ஒரு­வர் மாண்டு­கி­டந்­தார். பொங்­கோல் சென்ட்­ரல் வீவக புளோக் 623சி-யில் அந்த 54 வயது துப்­பு­ர­வுப் பணி­யா­ள­ரின் உடல் நேற்று கண்­டெ­டுக்­கப்­பட்­டது.

ஆட­வர் மாண்­டதை மருத்­துவ உத­வி­யா­ளர்­கள் நேற்று காலை சுமார் 8.15 மணிக்கு சம்­பவ இடத்­தில் உறு­திப்­ப­டுத்­தி­ய­தா­க போலி­சார் அறிக்கை ஒன்­றில் தெரி­வித்­தனர். இச்சம்பவத்தில் சந்­தே­கத்­திற்­கு­ரிய செயல் குறித்த ஐயங்கள் இல்லை என்­றும் சம்­ப­வத்தை இயற்­கைக்கு மாறான மர­ணம் என்று வகைப்­ப­டுத்தி விசா­ரணை மேற்­கொண்டு வரு­வ­தா­க­வும் போலி­சார் கூறி­னர். மாண்­ட­வர் பாசிர்-ரிஸ் பொங்­கோல் நகர மன்­றத்­தில் உள்ள பகு­தி­களில் வேலை செய்தவர். அவர் வீவக புளோக்­கு­களில் துப்­பு­ர­வுப் பணி­களை மேற்­கொண்டு வந்­த­வர்.

குப்பைக் சேரும் அறையின் கதவிற்­கும் குப்பை விழும் பகு­திக்­கும் இடையே அவர் சிக்­கி­யி­ருந்­ததாக மனி­த­வள அமைச்சு ஓர் அறிக்­கை­யில் தெரி­வித்­தது. உயிரி­ழந்த துப்­பு­ர­வுப் பணி­யா­ளர் திரு லீ என்று அடை­யா­ளம் காணப்­பட்­டுள்­ளார். அவர் லியென் செங் கான்ட்­ரெக்­டிங் நிறு­வ­னத்­திற்கு வேலை செய்­தார்.

சம்­ப­வம் குறித்து மனி­த­வள அமைச்சு விசா­ரணை மேற்­கொண்டு வரு­கிறது. கட்­ட­டத்­தின் குப்­பை­களை­யும் சேக­ரிக்­கும் பகுதி­கள் உள்­ளிட்­ட­வற்­றின் தொடர்பான அனைத்து நட­வடிக்­கை­களை­யும் நிறுத்­து­மாறு அமைச்சு லியென் செங் நிறு­வனத்­திற்கு உத்­த­ர­விட்­டுள்­ளது. இச்­சம்­ப­வத்­தைத் தொடர்ந்து சிங்­கப்­பூ­ரில் இவ்­வாண்டு நேர்ந்த வேலை­யிட மர­ணங்­க­ளின் எண்­ணிக்கை 32ஆக அதி­க­ரித்­துள்­ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!