$130 மி. மதிப்புள்ள ‘சிடிசி’ பற்றுச்சீட்டுத் திட்டம் செயலி வடிவில் இருக்கும்

இன்­னும் ஒரு சில மாதங்­களில் தொடங்­கப்­பட உள்ள $130 மில்­லி­யன் மதிப்­புள்ள சமூக மேம்­பாட்டு மன்ற (சிடிசி) பற்­றுச்­சீட்­டுத் திட்­டம், செயலி வடி­வத்­தில் இருக்­கும்.

மக்­கள் கழ­கத்­து­டன் சேர்ந்து ஐந்து சமூக மேம்­பாட்டு மன்­றங்­கள் நேற்று வெளி­யிட்ட கூட்­ட­றிக்­கை­யில் இத­னைத் தெரி­வித்­தன.

வணி­கர்­களும் உண­வங்­கா­டிக் கடைக்­கா­ரர்­களும் இந்­தப் பற்­றுச்­சீட்­டு­களை ஏற்­றுக்­கொள்ள, சமூக மேம்­பாட்டு மன்­றங்­கள் மற்­றும் எஸ்ஜி மின்­னி­லக்க அலு­வ­ல­கத்­தைச் சேர்ந்த பற்­றுச்­சீட்­டுத் தூதர்­கள் உதவி செய்­வர்.

இந்­தத் திட்­டத்­தின்­கீழ், எதிர்­வரும் மாதங்­களில் 1.3 மில்­லி­யன் சிங்­கப்­பூர் குடும்­பங்­கள் தலா $100 பற்­றுச் சீட்­டு­க­ளைப் பெற­வி­ருக்­கின்­றன.

'ரிடீம்­எஸ்ஜி மெர்­சண்ட்' என்று அழைக்­கப்­படும் இந்­தச் செயலி, வீட­மைப்­புப் பேட்­டை­க­ளின் வர்த்­த­கர்­கள், உண­வங்­கா­டிக் கடைக்­கா­ரர்­களிடம் வழங்கப்படும் அர­சாங்­க மின்­னி­லக்­கப் பற்­றுச்­சீட்­டு­க­ளைப் பெற்­றுக்­கொள்­ளும்.

மேலும் பற்­றுச்­சீட்­டுப் பரி­வர்த்­தனை­க­ளைக் கண்­கா­ணித்­தல், பற்­றுச்­சீட்­டு­களை ரொக்­க­மாக வர்த்­த­கர்­க­ளுக்கு விரை­வாக மாற்­றி­விடு­தல் ஆகி­ய­வற்­றை­யும் செய­லி­யால் மேற்­கொள்­ள­மு­டி­யும் என்று சமூக மேம்­பாட்டு மன்­றங்­கள் கூறின.

வீட­மைப்­புப் பேட்­டை­க­ளின் வர்த்­த­கர்­கள், உண­வங்­கா­டிக் கடைக்கா­ரர்­கள் ஆகி­யோர் இந்­தச் செய­லி­யைப் பயன்­ப­டுத்­தும் தங்­கள் விருப்­பத்­தைத் தெரி­விக்க நேற்று முதல் அழைப்பு விடுக்­கப்­பட்­டி­ருக்­கிறது. அதன் பின்­னர் சமூக மேம்­பாட்டு மன்றத் தூதர்கள் அடுத்த இரண்டு வாரங்­களில் அவர்­களை அழைத்து செய­லி­யைப் பயன்­ப­டுத்­தும் விதத்­தைச் சொல்­லிக்கொடுப்­பார்­கள்.

"இந்த சிடிசி பற்­றுச்­சீட்­டுத் திட்­டம் வர்த்­த­கர்­கள் அளித்த பல்­வேறு கருத்­து­க­ளின் அடிப்­ப­டை­யில் மாற்றி அமைக்­கப்­பட்­டுள்­ளது. காகி தத்தால் ஆன பற்­றுச்­சீட்­டு­க­ளைச் சேக­ரித்து அவற்றை ரொக்­க­மாக்கு­வது கூடு­தல் சுமை­யைத் தரு­கிறது என்று அவர்­கள் கூறி­னர்," என்­றார் மேயர்­கள் குழு­வின் தலை­வ­ரும் வர்த்­தக தொழில் துணை அமைச்­ச­ரு­மான லோ யென் லிங்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் சமூக மேம்­பாட்டு மன்ற பற்­றுச்­சீட்டு­கள் அறி­மு­கம் கண்­டன. அர­சாங்க உத­வித் திட்­டங்­கள் மூலம் 400,000 குறைந்த வரு­மானக் குடும்­பங்­கள் இதற்கு அடை­யா­ளம் காணப்­பட்­டன.

உள்­ளூர் கடை­களில் செல­வழிக்க, ஒவ்­வொரு குடும்­பத்­திற்­கும் $50 காகி­தப் பற்­றுச்­சீட்­டு­கள் வழங்­கப்­பட்­டன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!