பாதுகாப்புடன் நெதர்லாந்து, லண்டன் பயணிகளுக்கு வரவேற்பு

கொவிட்-19க்கு எதி­ராக தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோ­ருக்­கான பய­ணத் திட்­டத்­தின்­கீழ் (விடி­எல்) நேற்­றுக் காலை கிட்­டத்­தட்ட 250 பய­ணி­கள் சிங்­கப்­பூர் வந்­துள்­ள­னர். அவர்­கள் தங்­க­ளைத் தனி­மைப்­படுத்­திக் கொள்­ளத் தேவை­ இல்லை.

சிங்­கப்­பூர் ஏர்­லைன்ஸ் இயக்­கிய SQ329 விமா­னத்­தில் நெதர்­லாந்­தி­லி­ருந்து ஏறக்­குறை 80 பயணி­கள் நேற்று அதி­காலை 6.30 மணிக்கு சாங்கி விமான நிலை­யத்­தில் தரை­யி­றங்­கி­னர்.

ஒன்­றரை மணி நேரம் கழித்து, லண்­ட­னி­லி­ருந்து 170 பய­ணி­க­ளு­டன் SQ317 விமா­னம் தரை­யி­றங்­கி­யது.

சாங்கி விமான நிலை­யத்­தின் முனை­யம் 3ல் வந்­தி­றங்­கிய இந்­தப் பய­ணி­களில் பெரும்­பா­லா­னோர், தனி­யாக அல்­லது தம்­ப­தி­யாக வந்­தி­ருப்­ப­வர்­கள் என்­பதை ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் குழு­வி­னர் அறிந்­த­னர். குழந்­தை­க­ளு­டன் குறைந்­தது மூன்று குடும்­பங்­கள் வந்­தி­ருந்­தனர். பய­ணி­களில் ஆசி­யர்­களும் வெள்­ளை­யர்­களும் கலந்து காணப்­பட்­ட­னர்.

வரு­கை­யா­ளர் பகு­தி­யில் நட­மாட்­டக் கட்­டுப்­பா­டு­கள் கடு­மை­யாக இருந்­தன. பொது­மக்­கள் அனு­ம­திக்­கப்­ப­டாத பகுதி வழி­யாக பய­ணி­கள் வழி­ந­டத்­தப்­பட்­ட­னர்.

விமான நிலை­யத்­தி­லி­ருந்து அவர்­கள் வெளியே செல்­வ­தற்கு முன்­னர், விமான நிலையப் பணியாளர் அவர்­களுக்கு 'பிசி­ஆர்' பரி­சோ­த­னையை மேற்­கொண்­டார்.

பய­ணி­களை அழைத்­துச்­செல்ல வந்த குடும்ப உறுப்­பி­னர்­கள் அல்­லது நண்­பர்­கள் ஒரு தனிப் பகுதி­யில் காத்­தி­ருந்­த­னர்.

வாக­னம் ஓட்டி வந்­த­வர்­கள் பயணி­க­ளைச் சந்­தித்த பிறகு வாக­ன­ நி­றுத்­து­மி­டத்­துக்­குத் தனி மின்­தூக்­கி­யில் செல்ல வேண்­டும். அதனை ஏனைய பொது­மக்­கள் பயன்­ப­டுத்த முடி­யாது.

கொவிட்-19க்கு எதி­ராக முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வர்­கள், எதிர்­வ­ரும் வாரங்­களில் மேலும் ஒன்­பது நாடு­க­ளுக்­குத் தனிமை உத்­த­ர­வின்றி சென்று­வர முடி­யும்.

தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோ­ருக்­கான பய­ணத் திட்­டத்­தின்­கீழ், தற்­போது (அக்­டோ­பர் 19 முதல்), கனடா, டென்­மார்க், பிரான்ஸ், இத்­தாலி, நெதர்­லாந்து, ஸ்பெ­யின், பிரிட்­டன், அமெ­ரிக்கா ஆகிய நாடு­க­ளுக்­குத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோர் சென்று வர­லாம். சிங்­கப்­பூர் வந்­தி­றங்­கி­ய­வு­டன் அவர்­கள் இங்குத் தங்களைத் தனி­மைப்­படுத்­திக் கொள்­ளத் தேவை­யில்லை.

சிங்­கப்­பூர் இது­வரை மொத்­தம் 11 நாடு­க­ளு­டன் இந்த இரு­த­ரப்பு பயண ஏற்­பா­டு­க­ளைச் செய்­து­கொண்­டுள்­ளது. நவம்­பர் 15 முதல், விடி­எல் திட்­டம் தென்­கொ­ரி­யா­வுக்­கும் நீட்­டிக்­கப்­ப­டு­கிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!