வடகொரியாவுடன் வர்த்தகம்; சிங்கப்பூரருக்கு அபராதம்

அமெ­ரிக்க மத்­திய புல­னாய்­வுத் துறை­யால் தேடப்­படும் சிங்­கப்­பூர் வர்த்­த­கர் ஒரு­வ­ருக்கு நேற்று 210,000 வெள்ளி அப­ரா­தம் விதிக்­கப்­பட்­டது.

வட­கொ­ரி­யா­வுக்­காக பல மில்­லி­யன் டாலர் மோச­டி­யில் ஈடு­பட்­ட­தா­கக் கூறப்­படும் 44 வயது டான் வீ பெங், அமெ­ரிக்க புல­னாய்­வுத் துறை­யால் தேடப்­படும் நபர்­க­ளின் பட்­டி­ய­லில் இடம்­பெற்­றுள்­ளார்.

சிங்­கப்­பூ­ரில் உள்ள வீ டியோங் என்ற நிறு­வ­னத்­துக்கு அவர் நிர்­வாக இயக்­கு­ந­ரா­க­வும் பங்­கு­தா­ர­ரா­க­வும் இருந்து வரு­கி­றார்.

இந்­நி­லை­யில் வட­கொ­ரி­யா ­வுடன் நடை­பெற்ற சட்­ட­வி­ரோத வர்த்தகங்­களை மறைப்­ப­தற்­காக பொய்­யான கணக்­கு­களைக் காட்­டி­ய­தாக அவர் மீது குற்­றச்­சாட்­டு­கள் கொண்டு வரப்­பட்­டன. இதன் தொடர்­பில் மொத்­தம் ஏழு குற்­றச்­சாட்­டு­களை அவர் எதிர்­நோக்­கி­னார்.

நீதி­மன்­றத்­தில தன் மீது சுமத்­தப்­பட்ட அனைத்­துக் குற்­றச்­சாட்­டு­க­ளை­யும் டான் ஒப்­புக்கொண்­டார்.

அவ­ருக்­குத் தண்­டனை விதிக்­கப்­ப­டும்­போது இதேபோன்ற மேலும் 13 குற்­றச்­சாட்­டு­களும் கவ­னத்­தில் எடுத்­துக்கொள்­ளப்­பட்­டன.

வீ டியோங்­கின் துணை நிறு­வ­ன­மான மோர்­கன் மார்­கோ­சுக்­கும் அவர் இயக்­கு­ந­ரா­க­வும் பங்­கு­ தா­ர­ரா­க­வும் இருக்­கி­றார்.

ஐநா 2010 விதி­மு­றை­யின் கீழ் சிங்­கப்­பூ­ரில் உள்­ள­வர்­களும் சிங்­கப்­பூ­ருக்கு வெளியே உள்ள சிங்­கப்­பூ­ரர்­களும் வட­கொ­ரி­யா­வு­டன் விநி­யோ­கம், விற்­பனை, ஆடம்­ப­ரப் பொருட்­களை ஏற்­று­மதி செய்­வது போன்­ற­வற்­றில் ஈடு­ப­டக்கூடாது என்று நேற்று வெளி­யிட்ட அறிக்­கை­யில் சிங்­கப்­பூர் போலிஸ் நினை­வூட்­டி­யது.

வடகொரியாவில் உள்ள எந்த நபரிடமிருந்தும் பொருட்களைத் தருவிக்கவும் தடை செய்யப்பட்டு உள்ளது. திரு டான், வடகொரி யாவைச் சேர்ந்த இருவருக்கு சர்க்கரை விற்றதாக நீதிமன்ற விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் 2017 நவம்பர் 8க்கு முன்பு வடகொரியாவுடனான வர்த்தகம் சட்ட விரோதமானதாகக் கருதப் படாது என்று ராஜா அண்ட் டான் சட்ட நிறுவனத்தின் அவரது வழக் கறிஞர் ஜோசஃபின் சீ வாதிட்டார்.

ஓசிபிசி மற்றும் யுஓபி வங்கிகள் அவரது வங்கிக் கணக்கில் சேர்க்கப்பட்ட சில குறிப்பிட்ட முதலீடுகள் குறித்து விளக்கம் கேட்டபோது வடகொரியாவுடனான வர்த்தக பரிவர்த்தனைகளை மறைக்க டானும் வீ டியோங்கில் நிர்வாகியாகப் பணியாற்றிய போங் ஹுய் பிங்கும் மோசடி ஆவணங் களைத் தயாரித்து அளித்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!