குழு பரிந்துரைகளை அமைச்சு பரிசீலிக்கும் நிபு­ணர்­கள், நிர்­வா­கி­கள், மேலா­ளருக்கு உதவ­ ஆலோசனைகள்

வேலை­யி­டங்­களில் நியா­ய­மான அணு­கு­முறை நடப்­பில் இருப்­பதை உறு­திப்­ப­டுத்­த­வும் உள்­ளூர் ஊழி­யர்­க­ளுக்கு ஆத­ரவு அளிக்­க­வும் தேசிய தொழிற்­சங்க காங்­கி­ர­சும் (என்­டி­யுசி) முத­லா­ளி­கள் கூட்­ட­மைப்­பும் பல பரிந்­து­ரை­களை முன்­வைத்து இருக்­கின்­றன.

அவற்றை மனி­த­வள அமைச்சு பரி­சீ­லிக்­கும் என்று தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.

மனி­தவ­ளக் கொள்­கை­கள், வேலை­ இ­டங்­களில் நியா­ய­மான அணு­கு­முறை ஏற்­பாடு, வேலை நிய­மன ஆத­ரவு செயல்­திட்­டங்­கள் ஆகி­ய­வற்றை அமைச்சு இப்­போது மறு­ப­ரி­சீ­லனை செய்து வரு­கிறது.

இதில் அந்­தப் பரிந்­து­ரை­கள் கவ­னத்­தில் கொள்­ளப்­படும் என்று நேற்று அமைச்சு தெரி­வித்­தது.

என்­டி­யு­சி­யும் சிங்­கப்­பூர் தேசிய முத­லா­ளி­கள் கூட்­ட­மைப்­பும் அமைத்து இருக்­கும் சிறப்­புப் பணிக்­குழு, நிபு­ணர்­கள், நிர்­வா­கி­கள், மேலா­ளர்­க­ளுக்கு (பிஎம்இ) உதவு­வதற்­கான ஒன்­பது பரிந்­து­ரை­களை முன்­வைத்­துள்­ளது.

இதன் தொடர்­பில் அமைச்சு நேற்று தனது நிலையை விளக்கியது.

வேலை­யி­டத்­தில் நியா­ய­மான அணு­கு­முறை கடை­பி­டிக்­கப்­ப­டு­வதற்­கான ஏற்­பாட்டை மறு­பரிசீலனை செய்­வ­தற்­காக ஜூலை மாதம் முத்­த­ரப்­புக் குழு ஒன்று அமைக்­கப்­பட்­டது.

இதை நேற்று அமைச்சு சுட்­டிக்­காட்­டி­யது.

அந்­தக் குழு, இப்­போதைய பரிந்­து­ரை­களை ஆரா­யும் என்­றும் அமைச்சு தெரி­வித்­தது.

உள்­நாட்டு பிஎம்இ ஊழி­யர் அணிக்கு வெளி­நாட்டு பட்­டத் தொழி­லர்­கள் உறு­து­ணை­யாக இருக்­கி­றார்­கள் என்­ப­தை­யும் நிறு­ வனங்­கள் சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்கு நல்ல வேலை­களை உரு­வாக்­கித் தர அவர்கள் உதவுகிறார்கள் என்பதை யும் உறுதிப்படுத்த காலக்­கி­ரம முறைப்­படி வேலை அனு­மதிக் கொள்­கை­களை அமைச்சு மறு­பரி­சீ­லனை செய்து வரு­கிறது என்­றும் தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.

சிங்­கப்­பூ­ரர்­களை மூலா­தா­ர­மாகக்கொண்ட வலு­வான ஊழி­யர் அணி இருக்­க­வேண்­டும் என்ற இலக்கை நிறை­வேற்­றும் வகை­யில் எம்­பி­ளாய்­மெண்ட் பாஸ் ஏற்­பாட்டை மேலும் செம்­மை­யா­கத் திருத்தி அமைப்­ப­தற்­கான வழி­வ­கை­களை தான் ஆராய்ந்து வரு­வ­தா­க­வும் அமைச்சு குறிப்பிட்டு உள்ளது.

உள்­ளூர்­வா­சி­க­ளுக்குப் பல வேலை வாய்ப்­பு­களும் கிடைக்க உத­வு­வதே அர­சாங்­கத்­தின் முன்­னு­ரி­மை­யாக இருந்து வந்­துள்­ளது என்­ப­தை­யும் அமைச்சு சுட்­டி­யது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!