தனிமை உத்தரவை மீறியதாக ஆடவர் மீது குற்றச்சாட்டு

ஹோட்­டல் அறை­யில் தனி­மை­யில் இருக்­க­வேண்­டும் என்று பிறப்­பிக்­கப்­பட்ட உத்­த­ரவை நான்கு முறை மீறி அதன்­மூலம் மற்­ற­வர்­க­ளுக்­குக் கொரோனா கிருமி பர­வக்­கூ­டிய ஆபத்தை ஓர் ஆட­வர் ஏற்­ப­டுத்­தி­னார் என்று கூறப்­பட்­டது.

ஆங் சென்­ரூய், 27, என்ற அந்த ஆட­வர் நேற்று நீதி­மன்­றத்­தில் முன்­னி­லை­யா­னார். அவர் தொற்­று­நோய்ச் சட்­டத்­தின்­கீழ் நான்கு குற்­றச்­சாட்டுகளை எதிர்­நோக்­கு­கி­றார். குற்­றச்­செ­யல்­கள் இடம்­பெற்­ற­போது ஆங்­கிற்­குத் தொற்று இருந்­ததா என்­பது தெரி­ய­வில்லை.

வெளி­நாட்­டில் இருந்து ஏப்­ரல் 17ஆம்­ தேதி சிங்­கப்­பூர் வந்த அவ­ருக்கு, மே 1ஆம் தேதி­வரை பீச் ேராட்­டில் உள்ள ஒரு ஹோட்­டல் அறை­யில் 14 நாட்­கள் தனி­மை­யில் இருக்­க­வேண்­டும் என்று உத்­த­ர­வி­டப்­பட்­டது.

ஆனால் மூன்று நாள் கழித்து அவர் அனு­ம­தி­யின்றி ஹோட்­டல் அறையை­விட்டு வெளி­யேறி சிராங்­கூன் சென்ட்­ர­லில் இருக்கும் அவ­ரு­டைய வீட்­டுக்­குச் சென்­ற­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

அந்த வீட்­டில் குடி­யி­ருக்கும் ஒருவருடன் சேர்ந்து பக்­கத்­தில் உள்ள காப்­பிக்­க­டைக்கு அவர் சென்­றார் என்­றும் கூறப்­பட்­டது.

இரு­வ­ரும் பக்­கத்­தில் இருக்­கும் நெக்ஸ் கடைத்­தொ­கு­திக்­குச் சென்­ற­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­டது. இப்­படி அவர் பல­முறை உத்­த­ரவை மீறி­ய­தாக நீதி­மன்­றத்­தில் கூறப்­பட்­டது.

ஆங்­கிற்கு $10,000 பிணை அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளது. டிசம்­பர் 3 ஆம்­ தேதி அவர் குற்­றங்­களை ஒப்­புக்­கொள்­வார் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

தொற்­று­நோய்த் தடுப்­புச் சட்­டத்­தின்கீழ் ஒவ்­வொரு குற்­றத்­திற்­கும், முதல் தடவை குற்­றம் செய்து இருந்­தால் ஆறு மாதம் வரை சிறைத் தண்­டனை, $10,000 வரை அப­ரா­தம் விதிக்க முடி­யும்.

மீண்­டும் குற்­றம் செய்­தால் ஓராண்டு வரை சிறைத்தண்­ட­னை­யும் $20,000 வரை அப­ரா­த­மும் விதிக்க முடி­யும் என்பது குறிப்பிடத்தக்கது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!