இளம் தொழில்முனைவர் உட்பட 71 பேருக்கு விருது

நன்­யாங் தொழில்­நுட்­பப் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் 2017இல் இள­நி­லைப் பட்­டம் படித்­துக்­கொண்­டி­ருந்த முக­மது அப்­பாஸ் ஷெயேத் இப்­ராம்சா, படிப்­பி­லி­ருந்து விடுப்பு எடுத்­து­ தமது நண்­பர்­கள் இரு­வ­ரு­டன் சேர்ந்து நிறு­வ­னம் ஒன்­றைத் தொடங்­கி­னார்.

அந்தத் துணி­வான முடிவு அவ­ருக்கு பெரிய பல­னை ஈட்டித் தந்­துள்­ளது. அவர்­கள் தொடங்­கிய 'ரிலாய்' எனும் நிதித் தொழில்­நுட்ப நிறு­வ­னம், இது­வரை சுமார் $100 மில்­லி­யன் முத­லீட்­டைப் பெற்­றுள்­ளது.

கடந்த 2018இல் மீண்டும் படிப்­பைப் தொடர்ந்து பட்­டம் பெற்­றார் திரு முக­மது அப்­பாஸ்.

அவ­ருக்கு நேற்று முன்­தி­னம் நன்­யாங் தொழில்­நுட்­பப் பல்­க­லைக்­க­ழ­கம் உன்­னத இளம் முன்­னாள் மாண­வர் எனும் விரு­தை வழங்கி கௌரவித்தது. அவர் உட்­பட முன்­னாள் மாண­வர்­கள் 71 பேருக்கு அவ்­வி­ருது அளிக்­கப்­பட்­டது.

இந்­தோ­னீ­சி­யா­வின் முன்­னாள் உள்­துறை அமைச்­ச­ரான முக­மது டிட்டோ கர்­ணா­வி­யன் விருது பெற்­ற­வர்­களில் மற்­றொ­ரு­வர்.

அவர், 2013ஆம் ஆண்டு அப்­பல்­க­லைக்­க­ழ­கத்­தின் எஸ். ராஜ­ரத்­னம் அனைத்­து­லக ஆய்­வுப் பள்­ளி­யில் முனை­வர் பட்­டம் பெற்­ற­வர். இந்­தே­னீ­சி­யா­வின் தேசிய போலிஸ் துறை­யின் தலை­வ­ரா­க­வும் இருந்­த­வர்.

கல்வி அமைச்­சர் சான் சுன் சிங் விருது நிகழ்ச்­சி­யில் சிறப்பு விருந்­தி­ன­ரா­கக் கலந்­து­கொண்­டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!