மகிழ்ச்சியைத் தந்த தீபாவளி அன்பளிப்பு

சீ. ஜமிலா அக்­பர்

வாடகை வீட்­டில் வசித்து வரும் திரு­மதி குப்­பம்­மாள், 63, இந்­தத் தீபா­வ­ளிப் பண்­டி­கை­யின்­போது சற்று கூடு­தல் மகிழ்ச்சி அடைந்­தி­ருக்­கி­றார். துப்­பு­ர­வாள­ரா­கப் பணி­யாற்றி வந்த அவ­ருக்கு, உடல் நலப் பிரச்­சி­னை­க­ளால் வேலைக்­குச் செல்ல இயலவில்லை.

மக்­கள் கழக நற்­ப­ணிப் பேரவை, மெஸ்ரா எனப்­படும் மலாய் நற் பணிச் செயற்­குழு மன்­ற­மும் சேர்ந்து நேற்று பூன் லே வட்­டா­ரத்­தில் வழங்­கிய பண்­டி­கைக் ­கால அன்­ப­ளிப்­புப் பைக­ளைப் பெற்­றுக்­கொண்ட 250 குடும்­பங்­களில் இவ­ரும் அடங்குவார். இந்த பண்­டி­கைக் காலத்து அன்­ப­ளிப்­புப் பை, தமக்கு பய­னுள்­ள­தாக இருக்­கும் என்­றார் திரு­மதி குப்­பம்­மாள்.

பூன் லே டிரை­வில் புளோக் 188ல் உள்ள வாடகை வீடு­களில் வசிக்­கும் ­கு­டும்­பங்­க­ளுக்கு நேற்று அன்­ ப­ளிப்­புப் பைகள் வழங்­கப்­பட்­டன.

மக்­கள் கழ­கத்­தின் நற்­ப­ணிப் பேர­வை­யும் மெஸ்ரா எனப்­படும் மலாய் நற்­ப­ணிச் செயற்குழு மன்­ற­மும் சேர்ந்து ஏற்­பாடு செய்த இந்த நிகழ்­வில் தேசிய வளர்ச்சி அமைச்­ச­ரும் வெஸ்ட் கோஸ்ட் நாடா­ளு­மன்றக் குழுத்­தொ­குதி அடித்­தள அமைப்­பு­க­ளுக்­கான ஆலோ­ச­க­ரு­மான திரு டெஸ்­மண்ட லீ கலந்து கொண்­டார்.

செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய திரு லீ, நேற்­றைய நிகழ்வு பெருந்­தொற்று ஏற்­ப­டுத்­தி­யுள்ள இக்­கட்­டான சூழ­லால் எளி­தில் பாதிப் ­ப­டையக்கூடிய மூத்த குடி­மக்­க­ளின் நலனை விசா­ரிக்க ஒரு வாய்ப்­பைத் தந்­த­தா­கக் கூறி­னார். நேற்று அவ­ரு­டன் நேர்ந்து சுமார் 45 தொண்­டூ­ழி­யர்­கள் அன்­ப­ளிப்­புப் பைகளை குடி­யி­ருப்­பா­ளர்­க­ளுக்கு வழங்­கி­னர்.

நற்­ப­ணிப் பேர­வை­யும் மெஸ்ரா வும் இணைந்து தீவு முழு­தும் சுமார் 3,500 வசதி குறைந்த குடும்­பங்­ க­ளுக்கு அன்­ப­ளிப்­புப் பைகளை வழங்கி வரு­கின்­றன.

இம்­மா­தம் 19ஆம் தேதி தொடங்கி நவம்­பர் 7ஆம் தேதி வரை நடை­பெ­றும் இந்த விநி­யோ­கத்­தில் 1,000 தொண்­டூ­ழி­யர்­கள் பங்­கெ­டுப்­ப­தா­கக் கூறி­னார் நற்­ பணிப் பேர­வைத் தலை­வர் திரு கே ராம­மூர்த்தி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!