காரை வேகமாகப் பின்னோக்கி ஓட்டி போக்குவரத்து போலிஸ் அதிகாரி மீது மோதிய ஆடவர் மீது வேண்டுமென்றே அரசாங்க ஊழியருக்குக் காயம் விளைவித்ததாகக் குற்றச்சாட்டு பதிவாகி உள்ளது.
இம்மாதம் 28ஆம் தேதியன்று காலை 8.55 மணி அளவில் கேலாங் ஈஸ்ட் அவென்யூ 1ல் மூத்த ஸ்டாஃப் சார்ஜெண்ட் ஹைடில் ஒஸ்மானைக் காயப்படுத்தியதாக 37 வயது ஆங் சீ செங் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அந்தச் சம்பவம் கேமராவில் பதிவாகி சமூக வலைத்தளங்களில் பரவியது.