சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் மருத்துவ வீரரான 26 வயது பெஞ்சமின் இயோ கிட்டத்தட்ட நாள்தோறும் கடுமையான பணிகளைச் செய்து வருகிறார். காயமுற்றவர்களைத் தூக்கி தூக்குப்படுக்கையில் வைப்பது, உயிர்வாயுக் கலன் போன்ற கனமான மருத்துவச் சாதனங்களைத் தூக்குவது போன்றவை அவற்றில் சில.
இந்தப் பணிகளில் இடுப்புவலி என்பது சாதாரணமாக வரக்கூடியது. ஆனால், இந்த மெல்லிய 'எக்ஸோசூட்' சாதனத்தை அணிந்து கொண்டால், அது இடுப்புவலியைக் குறைக்கும்.
நேற்று முன்தினம் அறிமுகப்
படுத்தப்பட்ட இந்த 'எக்ஸோசூட்' சாதனத்தை நெஞ்சுப் பகுதியில் அணிந்துகொள்ள வேண்டும். சரிசெய்யக்கூடிய தோள்பட்டை சேணம் மூலம் அதன் இறுக்கத்தை
மாற்றிக்கொள்ளலாம்.
நெஞ்சுப் பகுதியில் உள்ள பட்டைகள், ஒருவர் குனியும்போது முதுகெலும்பில் உள்ள அழுத்தத்தைக் குறைக்கும். அதேவேளையில் தொடைப் பகுதியில் உள்ள பட்டைகள் அந்த அழுத்தம் கால்
களைப் பாதிக்காமல் பார்த்துக்கொள்ளும்.
"இந்தச் சாதனத்தில் மின்னணுவியல் அம்சங்கள் இல்லை. எல்லாம் 'ஸ்பிரிங்' எனப்படும் திருகு சுருள் வில் முறைதான். இந்தத் திருகு சுருள் வில், நான் கீழே குனியும்போது எனது உடல் எடையால் அழுத்தம் ஏற்படாமல் பார்த்துக்கொள்கிறது," என்றார் திரு இயோ.
வரும் ஜனவரி மாதம் தொடங்கவிருக்கும் ஓராண்டு சோதனைக்காக எட்டு 'எக்ஸோசூட்' சாதனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.