இணையம் வழி சிறுவர்களைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தும் படங்களையும் காணொளிகளையும் பெற முயற்சி செய்த 22 ஆடவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக போலிசார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 19 வயதுக்கும் 52 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
ஆபாசப் படங்கள் தொடர்பாக மேலும் ஆறு பேர் விசாரணையில் உதவி வருவதாக போலிசார் கூறினர்.
பல்வேறு வட்டாரங்களில் மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகள் நான்கு வாரங்களாக அதிரடி நடவடிக்கை நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது.