தீபாவளிப் பண்டிகையின்போது, அன்புக்குரியவருடன் அமைதியான சூழலில் உண்டு மகிழ, 'டபுள்யூ சிங்கப்பூர் - செந்தோசா கோவ்' ஹோட்டல், ராஃபிள்ஸ் ஹோட்டல் ஆகியவை புதிய தீபாவளி உணவுப்பட்டியலை உருவாக்கியுள்ளன.
ராஃபிள்ஸ் ஹோட்டலின் 'டிஃபன் ரூம்' உணவகத்திற்காக (மேல் படம்) இந்திய சமையல் வல்லுநர் குல்தீப் நெகி விதவிதமான உணவுவகைகளை இவ்வாண்டின் சிறப்புத் தீபாவளி விருந்து உணவுப் பட்டியலில் சேர்த்துள்ளார்.
இதில் வறுத்த தண்டூர் கடல் இறால் பட்டியலில் முக்கிய அங்கம் வகிக்கிறது. வெங்காய பஜ்ஜியுடனும் புதினா சட்னியுனும் சேர்த்து இது பரிமாறப்படுகிறது. சைவ உணவைத் தேர்தெடுப்பவர்களுக்கு மிருதுவான செங்கிழங்கு (பிட்ரூட்) மற்றும் காளான் கட்லட்யையும் கைவசம் வைத்திருக்கிறார்.
செந்தோசா கோவ் ஹோட்டலின் இந்திய சமையல் வல்லுநரான திரு சொலான்கி அசோக் குமார், தம் தந்தையிடமிருந்து சமையல் நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டவர். செம்மறி ஆட்டு இறைச்சியை காரமான வெங்காய, தக்காளி குழம்பில் மெதுவாக சமைத்து அதனை நாண்ணுடன் சேர்த்து சாப்பிடும் அனுபவத்தை (கீழ் படம்) இம்முறை 'டபுள்யூ சிங்கப்பூர் - செந்தோசா கோவ்' ஹோட்டல் வழங்குகிறது.