பிரதமர் லீ, ஜி-20 பொருளியல் களின் தலைவர்களை நேரடியாகச் சந்தித்ததை ஸூம் அழைப்பு களால் ஈடுசெய்யாத முடியாத விலைமதிப்புள்ள அனுபவம் என்று வருணித்துள்ளார்.
"ஸூம் சந்திப்பில் குறுக்கே பேச முடியாது, ஒரு யோசனையை முன்வைத்து மற்றவர் அதுபற்றி என்ன நினைக்கிறார் என்று பார்க்க முடியாது," என்று அவர் குறிப்பிட்டார்.
உச்சநிலைக் கூட்டத்தின் நடுவே, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட உலகத் தலைவர்களைப் பிரதமர் சந்தித்தார்.