வெளிநாட்டு ஊழியர்களுக்கு இன்னும் அதிகமான மனநல ஆதரவு

வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்­கான மன­ந­ல ஆத­ரவு பல முனை­களில் விரி­வாக்­கப்­ப­டு­கிறது. உதா­ர­ணத்­துக்கு, ‘ஃபாஸ்ட்’ எனப்­படும் நம்­பிக்­கை­யை­யும் ஆத­ர­வை­யும் வழங்­கும் குழு­வின் உறுப்­பி­னர்­கள் இதன் தொடர்­பில் அடிப்­படை மன­ந­ல மற்­றும் உள­வி­யல் முத­லு­தவி பயிற்­சிக்­குச் செல்­வார்­கள்.

இது­வரை 500 அதி­கா­ரி­கள் இந்­தப் பயிற்­சியை முடித்து விட்­டார்­கள் என்று மனி­த­வள அமைச்­சர் டான் சீ லெங் நேற்று நாடாளு­மன்­றத்­தில் தெரி­வித்­தார்.

மனி­த­வள அமைச்­சின் ஃபாஸ்ட் குழுக்­களில் இடம்­பெற்ற மனி­த­வள அமைச்­சின் அதி­கா­ரி­கள் ஊழி­யர் தங்­கு­வி­டு­தி­யில் கொவிட்-19 நில­வ­ரத்­தைக் கண்­கா­ணிக்க உத­வு­வார்­கள்.

அரசு சாரா அமைப்­பு­க­ளு­டன் அமைச்சு இணைந்து பணி­யாற்றி, ஆலோ­சனைச் சேவை அனை­வ­ருக்­கும் கிடைப்­பதை உறுதி செய்­வார்­கள். மேலும் தங்­கு­வி­டுதி நடத்து­நர்­க­ளுக்கு இணை­யக் கருத்­த­ரங்கு மூலம் மன­ந­லம் பற்­றி­யும் அதன் விழிப்­பு­ணர்வை அதி­க­ரிப்­பது பற்­றி­யும் தெரி­விக்­கப்­படும் என்­றும் அமைச்­சர் விவ­ரித்­தார்.

மன­ந­லக் கழ­கத்­து­டன் இணைந்து கடு­மை­யாக பாதிக்­கப்­பட்­டி­ருப்­போ­ருக்கு உட­ன­டி­யாக சிகிச்சை அளிக்­க­வும் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

தங்­கு­வி­டு­தி­யில் வசிக்­கும் ஊழி­யர்­க­ளின் மன­ந­லம் பற்றி ஹாலந்து-புக்­கிட் தீமா குழுத்­தொ­குதி உறுப்­பி­னர் எட்­வர்ட் சியா எழுப்­பிய கேள்­விக்­குப் பதி­ல­ளித்த டாக்­டர் டான், இவ்­வாண்டு ஜன­வரி முதல் செப்­டம்­பர் வரை 98 ஒர்க் ­பெர்­மிட் அட்­டை­தா­ரர்­கள் மன­நலக் கழ­கத்­தில் அனு­ம­திக்கப்­பட்­ட­னர் என்­றார். இது கடந்த ஆண்டு இதே­கா­ல­கட்­டத்­து­டன் ஒப்­பி­டு­கை­யில் குறைவு. ஆனால், 2019ல் இந்த எண்­ணிக்கை அதி­க­மாக இருந்­தது.

அரசு சாரா அமைப்­பு­கள், தங்கு­வி­டுதி நடத்­து­நர்­கள் தவிர, முத­லா­ளி­கள் மற்­றும் ஊழி­யர்­க­ளு­டன் இணைந்து கடந்த ஆண்டு நவம்­ப­ரில் அமைக்­கப்­பட்ட புரோ­ஜெக்ட் டோன் பணிக்­கு­ழுத் திட்­டத்­தின் மூலம், வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளின் மன­ந­ல­த்தை மேம்­ப­டுத்த மனி­த­வள அமைச்சு பணி­யாற்றி வரு­கிறது.

ஊழி­யர்­க­ளுக்­குள் ஆத­ர­வுத் தலை­வர்­க­ளைத் தேர்ந்­தெ­டுத்து அவர்­க­ளுக்­குப் பயற்­சி­ய­ளிப்­ப­தும் திட்­டத்­தில் அடங்­கும். அந்த வகை­யில் 2022 இறு­திக்­குள் 600 ஊழி­யர்­க­ளுக்­குப் பயிற்சி அளிக்­கப்­படும்.

கொவிட்-19 கட்­டுப்­பா­டு­க­ளால் தங்­கள் தங்­கு­வி­டு­தியை விட்டு வெளியே செல்ல முடி­யாத ஊழி­யர்­கள் பற்­றி­யும் அமைச்­சர் பேசி­னார்.

“இந்­தக் கட்­டுப்­பா­டு­கள் தளர்த்தப்படு­மா­னால், அது மிக­வும் கவ­னத்­து­ட­னும் படிப்­ப­டி­யா­க­வும் சிங்­கப்­பூ­ரின் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு முறைக்­குக் கூடு­தல் நெருக்குதல் கொடுக்­காத வண்­ணம் தளர்த்­தப்­பட வேண்­டும்.

“கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்­தி­லி­ருந்து ஊழி­யர்­கள் பொழு­து­போக்கு மையங்­க­ளுக்­குச் செல்ல அனு­ம­திக்­கப்­பட்டு வரு­கின்­ற­னர். இது வாரத்­துக்கு ஒரு முறை­யி­லி­ருந்து மூன்று முறைக்கு உயர்த்­தப்­பட்­டுள்­ளது.

“இத்­த­கைய வரு­கை­க­ளுக்கு முன் முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டுள்ள ஊழி­யர்­கள் பரி­சோ­தனை செய்­து­கொள்­வ­தை­யும் அமைச்சு நீக்­கி­யுள்­ளது.

கடந்த வார­யி­று­தி­யில், இத்­த­கைய சமூக இடங்­க­ளுக்கு ஊழி­யர்­கள் செல்­லும் எண்­ணிக்­கையை 500லிருந்து 3,000க்கு உயர்த்­தி­யது. அதில் கேலாங் சிராய், ஜூ சியாட் ஆகிய இடங்­களும் சேர்க்­கப்­பட்­டுள்­ளன,” என்­றும் டாக்­டர் டான் சொன்­னார்.

சமூக இடங்­களில் வெளி­நாட்டு ஊழி­யர்­கள் இருக்­கக்­கூ­டிய நேரம் வாரத்­துக்கு ஆறு மணி­நே­ரத்­தி­லி­ருந்து எட்டு மணி­நே­ரத்­துக்கு உயர்த்­தப்­பட்­டுள்­ளது. இந்த அதி­க­ரிப்­புத் திட்­டத்­தின் முன்­னோட்­டம் கடந்த மாதம் 30ஆம் தேதி தொடங்­கி­யது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!