கொவிட்-19 தொற்றிவிட்ட தாகவும் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாகவும் சமூக ஊடகத்தில் பொய் சொன்னதாக பதின்ம வயது ஆடவர் ஒருவர் இரு குற்றங் களை ஒப்புக்கொண்டார்.
அவர் சொன்ன பொய்யால், பூலாவ் தெக்கோங்கில் தேசிய சேவையாற்றிக் கொண்டிருந்த ஒருவரை தனிமை உத்தரவின் பேரில் வீட்டுக்கு அனுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டது.
சியூ ஹான்லோங், 19, என்ற அந்த இளைஞர், டிசம்பர் 14ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலையாவார். அப்போது அவருக்குத் தண்டனை விதிக்கப்படும்.