தர்மன்: பொருளியல் பிளவுபட்டால் உலகிற்கு பாதிப்பு

உல­கப் பொரு­ளி­யல் எதிர்­ எ­திர் தரப்­பு­க­ளாகப் பிரிந்­தால் உலகிற்குப் பாதிப்பு என்று மூத்த அமைச்­சர் தர்­மன் சண்­மு­க­ரத்­னம் தெரி­வித்­தார். சிறந்த முறை­யில் இடர்­களைச் சமா­ளிக்­கும் வகை­யில் பொருள், சேவை விநி­யோக ஏற்­பா­டு­க­ளைப் பன்­ம­யப்­ப­டுத்­து­வது சாத்­தி­ய­மா­னது என்று தான் நம்பு­வ­தா­க அவர் தெரி­வித்­தார்.

திறந்த பொரு­ளி­ய­லா­கத் தொடர்ந்து இருந்து நல்ல வேலை­களை உரு­வாக்க இய­லும் என்றும் அவர் குறிப்­பிட்­டார்.

அதே­வே­ளை­யில், வர்த்­தக, தொழில்­நுட்­பத்­தில் உல­கம் போட்டி தரப்புகளா­கப் பிரி­வதைத் தவிர்த்­துக்­கொள்ள வேண்­டும் என்­றும் திரு தர்மன் கூறி­னார். உல­கப் பொரு­ளி­யல் பிளவு­பட்­டால் உல­கிற்­குப் பாதிப்பு ஏற்­படும் என்றார் திரு தர்­மன்.

அமெ­ரிக்­கா­வின் வர்த்­தக அமைச்­சர் திரு­வாட்டி கினா ராய்­மொண்­டோ­வும் திரு தர்­ம­னும் மெய்­நி­கர் ரீதி­யில் கலந்­து­ரை­யாடி­னர். லீ குவான் இயூ பொதுக் கொள்­கைப் பள்­ளி­யும் அனைத்­து­லக பொரு­ளி­ய­லுக்­கான பீட்­டர்­சன் பயி­ல­கம் என்ற அமெ­ரிக்­கா­வின் அறிவு ஜீவி­கள் அமைப்­பும் ஏற்­பாடு செய்த அந்­தக் கலந்துரை­யாடல் நவம்­பர் 1ஆம் தேதி நடந்­தது.

மூத்த அமைச்­ச­ரு­டன் பல­வற்றை­யும் பற்றி உரை­யா­டிய திரு­வாட்டி ராய்­மொண்டோ, சீனா­வின் வர்த்­தக நடை­மு­றை­களில் நம்­பிக்கை இல்­லாத போக்கை அமெரிக்கா கைக்­கொள்­வ­தைப் பற்றி எடுத்துக் கூறினார்.

அமெ­ரிக்க அதி­பர் பைட­னின் இலக்­கான இந்தோ-பசிஃ­பிக் பொரு­ளி­யல் ஏற்­பாட்டை பற்றி அவர் விளக்­கி­னார். இந்த ஏற்­பாடு, அந்த வட்­டா­ரத்­தைச் சேர்ந்த ஒரே சிந்­தனை உள்ள, நம்­பிக்­கைக்­குப் பாத்­தி­ர­மான பங்­கா­ளி­களை ஒருங்கே கொண­ரும் என்றாரவர். அமெ­ரிக்­கா­வின் கொள்கை இந்தோ-பசி­ஃபிக் வட்­டா­ரம் பக்­கம் திரும்­பு­வதை, 'நண்­பருக்கு உத­விக்­க­ரம்' என்று அவர் வர்­ணித்­தார்.

பொருள், சேவை விநி­யோக ஏற்­பாடு பற்றி உல­கப் பெரும் நிறு­வ­னங்­களும் நடுத்­தர அளவு நிறு­வ­னங்­களும் சிந்­திக்­கும் முறை­யில் கொவிட்-19 கார­ண­மாக ஒரு மாற்­றம் ஏற்­பட்டு உள்­ள­தா­கக் குறிப்­பிட்­டார் திரு தர்­மன்.

அந்­தக் கண்­ணோட்ட மாற்­றம் உல­க­ம­யத்­தில் இருந்து பின்­வாங்கு­வ­தல்ல என்­றும் பொருள், சேவை விநி­யோக ஏற்­பாட்டை பன்­ம­யப்­படுத்தி இடர்­க­ளைச் சிறந்த முறையில் சமா­ளிப்­பதே என்­றும் திரு தர்­மன் கூறினார்.

ஆசி­யான் நாடு­களும் இதர வள­ரும் நாடுகளும் இத்­த­கைய பன்­மய விநி­யோக, உற்­பத்தி, தளவா­டப் போக்­கு­வ­ரத்து ஏற்­பாட்­டின் அங்­க­மாக இருக்­கும் என்று திரு தர்­மன் தெரி­வித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!