சிங்கப்பூரில் உணவங்காடி நிலையங்களில் உணவு உண்பவர்கள் சாப்பிட்ட பிறகு சாப்பாட்டு மேசையைச் சுத்தப்படுத்தும் இயக்கம் நடப்பில் இருக்கிறது.
இதுவரை எழுத்து மூலமான ஒரே ஓர் எச்சரிக்கை மட்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. யாருக்கும் அபராதம் விதிக்கப்படவில்லை என்று நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணை அமைச்சர் ஏமி கோர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
உணவங்காடிக் கடைகளில் உணவு உண்பவர்கள் பொது வாக ஒத்துழைக்கிறார்கள் என்று உறுப்பினருக்கு அளித்த பதிலில் அவர் கூறினார்.