பள்ளிக்கூடங்களில் பயன் படுத்தப்படும் தொழில் நுட்பங்கள், மாணவர்கள் உயர்நிலைத் தேர்ச்சிகளைக் கற்றுக்கொள்ள உதவுவதில் ஆசிரியர்கள் ஆற்றும் பங்குக்கு உறுதுணைதானே தவிர அவர்களின் முக்கியத்துவத்தைக் குறைப்பதற்கான ஒன்றல்ல என்று கல்வித் துணை அமைச்சர் சுன் ஷுவெலிங் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஆங்கில மொழி மதிப்பீடு களுக்கு இயந்திர மனித தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த உத்தேசிக்கப்பட்டு இருப்பதன் தொடர்பிலான ஜூரோங் குழுத்தொகுதி உறுப்பினர் டாக்டர் டான் ஊ மெங் கேட்டதற்கு அளித்த பதிலில் அமைச்சர் அவ்வாறு கூறினார்.