'பண்டோரா பேப்பர்ஸ்' எனப்படும் மிகப் பெரிய ஆவணக் கசிவு அண்மையில் இடம்பெற்றது. அதில் சிங்கப்பூரில் தொழில் நடவடிக்கைகளைக் கொண்டுள்ள இரண்டு நிறுவனங்கள் குறிப்பிடப்பட்டன.
ஆசியாசிட்டி டிரஸ்ட் சிங்கப்பூர், டிரிடெண்ட் டிரஸ்ட் கம்பெனி சிங்கப்பூர் என்ற அந்த இரண்டு நிறுவனங்களும் அந்த ஆவணக் கசிவு இடம் பெற்றதற்கு முன்பாகவே சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் மேற்பார்வை மற்றும் அமலாக்க நடவடிக்கை களுக்கு உள்ளானதாக நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.