கழிவறையில் பயன்படுத்தக்கூடிய ஒரு சாதனம் மூலம் நீரிழிவு நோயைப் பரிசோதிப்பது எதிர்காலத்தில் எளிதாகிவிடும். ரிபப்ளிக்
பலதுறைத் தொழிற்கல்லூரி
விரிவுரையாளர்களும் மாணவர்களும் இந்தச் சாதனத்தை உருவாக்கி வருகின்றனர்.
நாகானோவில் உள்ள ஜப்பானின் தேசிய தொழில்நுட்பக் கழகத்துடன் இணைந்து பணிபுரியும் இக்குழு, ஸ்பெக்ட்ரோமீட்டர் எனப்படும் சாதனத்தை உருவாக்கி வருகிறது. இதன் அகச்சிவப்பு ஒளி (infrared light) சிறுநீரில் உள்ள குளுக்கோஸ் அளவைக் கண்டறியும்.
பொதுவாக, இந்த அளவை அறிய மக்கள் தங்கள் விரல்களைக் குத்தி ரத்தத்தை எடுத்து பரி
சோதனை செய்வார்கள் என்று திட்ட மேலாளர் திரு டான் வீ சியோங் கூறினார்.
முதியோர் இல்லங்களில் அல்லது வீட்டில் தங்கள் குளுக்கோஸ் அளவைக் கண்காணிக்க விரும்பும் வேலை பார்க்கும் பெரியவர்
களுக்கு இது எளிதான முறையாக இருக்கலாம் என்றும் அவர் கூறினார். ஸ்பெக்ட்ரோமீட்டரிலிருந்து சேகரிக்கப்பட்ட தரவை கைபேசிச் செயலியில் சேமிப்பது குழுவின் இலக்கு. இது ஒருவரது ரத்த சர்க்கரை அளவின் முடிவுகளில் உள்ள போக்குகளைக் கண்டறிந்து
அவரது சர்க்கரை அளவு தொடர்ந்து அதிகமாக இருந்தால் எச்சரிக்கையை அனுப்பும்.
ரிபப்ளிக் பலதுறைத் தொழிற் கல்லூரியில் நேற்று முன்தினம் திறக்கப்பட்ட புதிய சுகாதாரம், உடலநல நிலையத்தின் உடல்நலப் பராமரிப்புக்கான பல்வேறு சுகாதார தீர்வு திட்டங்களில் ஸ்பெக்ட்ரோமீட்டர் ஒன்றாகும்.
சுகாதாரத்திற்கான நாடாளுமன்றச் செயலாளர் ரஹாயு மஹ்ஸாம் அதிகார்பூர்வமாக நேற்றுத் திறந்து வைத்த இந்நிலையம், சமூகத்திற்கான சுகாதாரத் தீர்வுகள் குறித்த ஆராய்ச்சி, மேம்பாட்டில் ஈடுபட மாணவர்களுக்கும் விரிவுரையாளர்களுக்கும் உதவும்.
"சுகாதாரம், உடலநல நிலையம் உருவாக்கப்பட்டிருப்பது, மக்களின் சுகாதாரத்திலும் சுகாதார மேம்பாட்டிலும் முயற்சிகளை வலுப்
படுத்த பயனுள்ளதாக இருக்கும்" என்று திருமதி ரஹாயு கூறினார்.
"சுகாதாரப் பராமரிப்புக்கு அப்பாற்பட்டு, ஆரோக்கியமான வாழ்க்கை முறையைத் தேர்ந்தெடுப்பதில், சிங்கப்பூரர்களுக்கு எவ்வாறு சிறந்த ஆதரவை வழங்க முடியும் என்பதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது," என்று அவர் மேலும் கூறினார்.
திறன்மேம்பாட்டில் ஆர்வமுள்ளோருக்காக சுகாதாரப் பராமரிப்பு குறித்த படிப்புகளை வழங்கும் ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியின் தொடர் கல்வி பயிற்சித் திட்டத்தின் இணைய வாசல் ஒன்றும் நேற்றுத் தொடங்கப்பட்டது.
சுகாதார நிர்வாகம் தொடர்பான பட்டயப் படிப்பை மேற்கொள்பவர்
களுக்கு பயன்படுத்தக்கூடிய ஓர் ஆய்வக்கூடத்தையும் இந்த நிலையம் கொண்டுள்ளது. உதாரணமாக, சுகாதாரப் பரிசோதனைகளை மேற்கொள்வது பற்றி அறிய மாணவர்கள் கருவிகளைப் பயன்படுத்தலாம்.
"சமூகத்துடன் இணைந்து பணியாற்றுவதன் மூலமும், தீர்வுகள், கண்டுபிடிப்புகள் மற்றும் சுகாதாரப் பாரமரிப்புத் துறையில் பயிற்சி களை வழங்குவதற்கும் தொழிற்துறை பங்காளிகளுடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம், சுகாதாரம், ஆரோக்கியத்திற்கான முயற்சிகளை ஒரே இடத்தில் மேற்கொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது," என்றார் ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியின் முதல்வரும் தலைமை நிர்வாகியுமான திரு இயோ லீ பியூ.
"இது சிங்கப்பூரர்களுக்கு வாழ்நாள் முழுவதும் தேவைப்படும் சுகாதாரத் தேவைகளை ஆதரிக்கும்," என்றார் அவர்.