பொஃப்மா அலுவலகத்தில் நடந்த விசாரணையின்போது அதிகாரி ஒருவர் தம்மை மன்னிப்பு கேட்கச் சொன்னதாக சமூக ஆர்வலர் ஜொலவன் வாம் தெரிவித்த கருத்து உண்மையல்ல என்று பொஃப்மா இணையவழி பொய்ச்செய்திக்கும் சூழ்ச்சித் திறத்துக்கும் எதிரான பாதுகாப்புச் சட்டத்தின் அலுவலகம் திட்டவட்டமாகக் கூறியுள்ளது.
கடந்த மாதம் 22ஆம் தேதியன்று தம்மிடம் மூன்று மணி நேரத்துக்கு விசாரணை நடத்தப்பட்டதாகவும் விசாரணையின் முடிவில் மன்னிப்புக் கேட்க விரும்புகிறீர்களா என்று அதிகாரி ஒருவர் தம்மிடம் கேட்டதாகவும் கடந்த மாதம் 24ஆம் தேதியன்று தமது ஃபேஸ்புக் பக்கத்தில் திரு வாம் பதிவிட்டார்.
பொய்ச் செய்தியைத் திருத்தும்படி பொஃப்மா அலுவலகம் திரு வாமுக்கு உத்தரவிட்டதை அடுத்து, விசாரணைக்காக அவர் அழைக்கப்பட்டார். சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் சட்டம் தொடர்பாகக் கூறாத ஒன்றை அவர் கூறியதாக திரு வாம் இணையத்தில் பதிவிட்டதும் பொஃப்மா சட்டம் அவர் மீது பாய்ந்தது. மன்னிப்புக் கேட்டால் சட்ட
ரீதியாக நடவடிக்கை எடுக்கப்
படாத என்பதைக் குறிக்கும் வகையில் அதிகாரியின் தொனி இருந்ததாக திரு வாம் கூறி
இருந்தார்.
அதிகாரத்தைப் பயன்படுத்தி அதிகாரிகள் மற்றவர்களை பய
முறுத்தியதாகவும் தம்மை அவ
மானப்படுத்தியதாகவும் திரு வாம் கூறினார்.
ஆனால் இதை பொஃப்மா அலுவலகம் மறுத்துள்ளது.
மன்னிப்பு கேட்க வேண்டும் என பொஃப்மா அவுலகம் எதிர்பார்க்கிறதா என்று திரு வாம் அதிகாரியிடம் கேட்டதாக அது கூறியது. அதுகுறித்து திரு வாம்தான் முடிவெடுக்க வேண்டும் என்று விசாரணை நடத்திய அதிகாரி பதிலளித்ததாக பொஃப்மா அலுவலகம் தெரிவித்தது.
திரு வாமையும் சேர்த்து மொத்தம் ஒன்பது பேர் அமைச்சர் சண்முகம் சொல்லாததை அவர் கூறியதாக இணையத்தில் பதிவு செய்ததாகக் கூறப்படுகிறது.
இணையத்தில் பதிவிடப்பட்டுள்ள பொய்ச் செய்திகளைத் திருத்தும்படி ஆண்ட்ரு லோ, கெர்ஸ்டன் ஹான், மார்ட்டின் சீ, ஜூலி ஓ'கோனோர், கோகிலா அண்ணாமலை, லின் லீ ஆகிய ஆறு சமூக ஆர்வலர்களுடன் 'வேக் அப் சிங்கப்பூர்' எனும் ஃபேஸ்புக் பக்கத்துக்கும் மக்கள் குரல் கட்சித் தலைவர் லிம் தியேனுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.