சன் தொலைக்காட்சியில் தொடர் பட்டிமன்றங்களை நிகழ்த்தி, பல திருமணங்களை நடத்திவைத்த கல்யாணமாலையுடன் தமிழ்ப்பட்டிமன்றக் கலைக் கழகம் இணைந்து வழங்கும் தீபாவளி சிறப்புப் பட்டிமன்றம் வரும் 7ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு யூடியூப்பில் இடம்பெற இருக்கிறது.
அதே நேரத்தில் தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகத்தின் ஃபேஸ்புக் பக்கத்திலும் அது ஒளிபரப்பப்படும். அடுத்தவர் வாழ்க்கையை நாம் ஆராய்வது பலமா? பலவீனமா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெறும்.