மூத்த அமைச்சர் டியோ சீ ஹியனின் மனைவி திருவாட்டி சியூ போ யிம் கடந்த ஞாயிற்றுக்
கிழமையன்று காலமானார்.
அவருக்கு 67 வயது.
திருவாட்டி சியூ 2015ஆம் ஆண்டில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவு வழங்கும் அறநிறுவனமான 'ஸ்ட்ரோக் சப்போர்ட் ஸ்டேஷனை' நிறுவினார்.
பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டோருக்கும் அவர்களைப் பராமரிப்பவர்களுக்கும் ஆதரவு நல்க, தொண்டூழியர்களால் அத்திட்டம் தொடங்கப்பட்டது.
அறநிறுவனத்தின் திட்டங்
களுக்கு சிங்கப்பூரில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்களும் சிகிச்சையாளர்களும் ஆதரவு வழங்கினர்.
பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டோர் மீண்டும் சமூகத்தில் இணையவும் அவர்களது நல்வாழ்வை உறுதி செய்யவும் சமூக ஆதரவு அவசியம் என்பதை உணர்ந்த திருவாட்டி சியூ, அந்த அறநிறுவனத்தை நிறுவினார்.
அவரது இறுதிச் சடங்கு நேற்று முன்தினம் நடைபெற்றது. அதில் அவரது குடும்பத்தார் மட்டுமே கலந்துகொண்டார்கள்.
அவருக்கு ஒரு மகனும் மகளும் பேரப் பிள்ளையும் உள்ளனர்.