வீட்டுக்குத் தேவையான சாதனங்களை விற்கும் கோர்ட்ஸ் நிறு
வனம் சிங்கப்பூரில் அதன் ஆகப் பெரிய பேரங்காடியைத் திறக்க இருக்கிறது.
இதற்கு கோர்ட்ஸ் நொஜிமா என்று பெயரிடப்பட்டுள்ளது. புதிய பேரங்காடி ஆர்ச்சர்ட் சாலையில் தி ஹீரன் கடைத்தொகுதியில் நாளை மறுநாள் திறக்கப்படும்.
ராபின்சன்ஸ் நிறுவனம்
விட்டுச் சென்ற இடத்தில் கோர்ட்ஸ் நொஜிமா செயல்படும்.
முதலில் மூன்று மாடிகள்
மட்டுமே திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் ஆறு மாடிகளும் வாடிக்கையாளர்களுக்குத் திறந்து விடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
தற்போது 228 ஆர்ச்சர்ட் சாலையில் இயங்கிவரும் கோர்ட்ஸ் பேரங்காடி மூடப்படும் என்று கோர்ட்ஸ் நிறுவனம் கூறியது.
அந்தப் பேரங்காடியில் தற்போது இருக்கும் பொருட்கள், சேவைகள் அனைத்தும் தி ஹீரனில் உள்ள புதிய பேரங்
காடிக்கு அனுப்பிவைக்கப்படும் என்று கோர்ட்ஸ் தெரிவித்தது.
தெம்பனிஸ் வட்டாரத்தில் உள்ள கோர்ட்ஸ் பேரங்காடிக்குப் பிறகு தனது இரண்டாவது பிரதான பேரங்காடியை கோர்ட்ஸ் நிறுவனம் தி ஹீரனில் திறக்கிறது.
தெம்பனிஸ் வட்டாரத்தில் உள்ள பேரங்காடி தொடர்ந்து செயல்படும் என்று கோர்ட்ஸ் நிறுவனம் தெரிவித்தது.