சிங்கப்பூர் முழுவதிலும் செப்டம்பர் 13ஆம் தேதிக்கும் அக்டோபர் 23ஆம் தேதிக்கும் இடையில் 103 உடற்பிடிப்புப் நிலையங்களில் அதிகாரிகள் மேற்கொண்ட அமலாக்க நடவடிக்கைகளின் விளைவாக 87 பேர் சிக்கினர்.
அவற்றில் 31 நிலையங்கள் செல்லுபடியாகக்கூடிய உரிமம் இல்லாமல் சட்டவிரோதமாக சேவை வழங்கியது தெரியவந்தது. வேலை பார்க்கும் ஊழியர்கள் பாலியல் சேவைகளை வழங்கவில்லை என்பதை அந்நிலையங்கள் உறுதிப்படுத்தவில்லை.
46 பெண்கள் கைதானதாக போலிஸ் தெரிவித்தது.