முரசொலி
சிங்கப்பூரர்கள் உலகிலேயே ஆயுட்காலம் மிக்கவர்கள். முதுமையிலும் இளமையோடு, சுறுசுறுப்பாக இருக்க வாழ்வில் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருபவர்கள். ஆயுள் முழுவதும் முடிந்தவரை உழைக்க விரும்புபவர்கள்.
மக்களின் இந்த மனநிலையையும் நாட்டின், வீட்டின், பொருளியலின் தேவைகளையும் உணர்ந்து முதியவர்கள் பாதகமாக, சுமைக இல்லாமல், சாதகமாக, பலன் உள்ளவர்களாக இருக்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்த அரசாங்கம் பல்வேறு கொள்கைகள், நடவடிக்கைகள், ஏற்பாடுகள், வசதிகளை நடைமுறைப்படுத்தி வருகிறது.
அவற்றை எல்லாம் முதிய ஊழியர்கள் திறம்பட நன்கு பயன்படுத்திக்கொண்டு, பின்தங்கிவிடாமல் காலத்திற்குப் பொருத்தமானவர்களாக தங்களைப் பல வழிகளிலும் மேம்படுத்திக்கொண்டு வருகிறார்கள். சிங்கப்பூரர்கள் தொடர்ந்து வேலை பார்த்து பொருள் ஈட்டி தங்கள் ஓய்வுக் காலத்தைப் பாதுகாத்துக்கொள்ள விரும்புகிறார்கள்.
ஊழியர் பற்றாக்குறை உள்ள சிங்கப்பூரில் அவர்களுக்குத் தேவையும் இருக்கிறது.
அனுபவம், ஆற்றல், உரிய, உயரிய தேர்ச்சிகள், நல்ல நியதிகள் எல்லாம் நிறைந்து இருந்தாலும்கூட அவர்களின் வயது ஒன்றையே வைத்து சில முதலாளிகள் அத்தகைய ஊழியர்களை உற்பத்தித்திறன் குறைந்தவர்களாக பார்க்கும் ஒரு மனப்போக்கு எங்கும் காணப்படுவது இயற்கைதான்.
முதிய ஊழியர்கள் ஒரு நிறுவனத்திற்கு அனுபவச் சொத்தாக, வளமாக இருக்கிறார்கள்.
அதேவேளை யில், பொருளியலுக்கு வலுச்சேர்க்கவும் அதன்மூலம் தங்கள் ஓய்வுக் காலத்திற்கான பொருள் வளத்தைப்பலப்படுத்தவும் அவர்கள் ஆயத்ததாக இருக்கிறார்கள்.
அத்தயை ஒரு வளத்தைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டிய தேவை பல கோணங்களிலும் அவசியமானதாக இருக்கிறது. இதை மனதில்கொண்டுதான் அரசாங்கம் அப்போதைக்கு அப்போது சட்டத் திட்டங்களை, கொள்கைகளை நடைமுறைகளை காலத்திற்கு ஏற்ப மாற்றி, திருத்தி வருகிறது.
சிங்கப்பூரர்களை இப்போது இருப்பதைவிட இன்னும் சிறந்த முறையில் ஓய்வுக் காலத்திற்குத் தர் படுத்தும் நோக்கத்துடன், சிங்கப்பூரர்களின் ஓய்வு வயதும் வேலை மறுநியமன வயதும் முறையே 65 ஆகவும் 70ஆகவும் படிப்படிக கூட்டப்படும் என்று அண்மையில் அரசாங்கம் அறிவித்தது.
அதேபோல் 55 முதல் 70 வரை வயதுள்ள மூத்த ஊழியர்களுக்கான மத்திய சேமநிதிச் சந்தாவும் மொத்தம் 2% கூட்டப்படும் என்ற அறிவிப்பும் இடம்பெற்றுள்ளது. இது பற்றியும் ஊழியர் ஒருவர் ஓய்வு பெறுவதற்கான சட்டபூர்வமான வயது வரம்பு தேவை, தேவை இல்லை என்பது பற்றியும் நாடாளுமன்றத்தில் அண்மையில் முக்கியமாக விவாதிக்கப்பட்டது.
புதிய அறிவிப்புகள், தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப, முடிந்தவரை வேலை பார்த்து சம்பாதித்து தங்கள் ஓய்வுக் காலத்திற்கு அதிகம் பொருள் ஈட்ட ஊழியர்களுக்கு ஆதரவு அளிக்கும் என்பது நிச்சயம். தன்னம்பிக்கை, சுயகௌரவத்துடன் உற்பத்தித்திறன் மிக்கவர்களாக முதியவர்கள் தொடர்ந்து திகழ்ந்து வருவதை உறுதிப்படுத்த வேண்டும் என்பதையும் புதிய அறிவிப்புகள் கவனத்தில் கொண்டு இருப்பதாக நம்பலாம். சிங்கப்பூர் மக்கள் தொகை மூப்படைந்து வருகிறது. இங்கு பத்து ஆண்டுகளுக்கு முன் வேலை பார்த்த சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகளில் 16.5 விழுக்காட்டினர் 55 வயதும் அதற்கு அதிக வயதும் உள்ளவர்களாக இருந்தார்கள். அவர்களின் எண்ணிக்கை சென்ற ஆண்டில் ஏறத்தாழ 25%ஆக உயர்ந்துவிட்டது. இந்த விழுக்காடு மேலும் அதிகமாகும் வாய்ப்பும் உள்ளது.
இத்தயை ஒரு நிலையைக் கருத்தில்கொண்டு, ஊழியர் சந்தைக் கொள்கைகளில் புத்தாக்கங்கள் இன்னும் செம்மைகத் திருத்தி அமைக்கப்பட வேண்டும். தொடர்ந்து வேலை பார்க்க விரும்பும் முதியவர்கள் அவ்வாறு செய்ய சட்டபூர்வமான ஏற்பாடுகள் இல்லாத நாடுகள் இருக்கின்றன. பாரபட்சத்திற்கு எதிரான சட்டதிட்டங்கள் அதுபோன்ற நாடுகளில் நடப்பில் இருந்தபோதிலும் முதிய ஊழியர்களுக்கு சிறந்த ஒரு வேலை வாய்ப்பு ஏற்பாடுகள் தங்களிடம் இல்லை என்பதை அத்தகைய நாடுகள் அனுபவம் மூலம் கண்டுள்ளன.
சிங்கப்பூரில் சில முதலாளிகள் தங்கள் நிறுவனத்தில் ஊழியர் ஓய்வு வயது ஏற்பாடுகளை எல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு அவர்கள் விரும்பும் வரை வேலை பார்க்க அனுமதிக்கிறார்கள். ஆனால் எல்லா முதலாளிகளும் இப்படிச் செய்வதில்லை என்பதால், எல்லாவற்றையும் கருத்தில்கொண்டு சட்டபூர்வமான ஓர் ஏற்பாடு தேவைகிறது.
முதியவர்கள் தொடர்ந்து வேலை பார்ப்பதற்கான புதிய கொள்கைகள் இங்கு படிப்படிக நடப்புக்கு வர இருப்பதைக் கருத்தில்கொண்டு முதலாளிகளும் ஊழியர்களும் முன்னதாகவே பேச்சுவார்த்தையில், விவாதிப்புகளில் ஈடுபட்டு இரு தரப்புகளுக்கும் இடையில் நியமான ஏற்பாடுகளைச் செய்துகொள்ளலாம். முதிய ஊழியர்கள் அனுபவமிக்கவர்கள். நிறுவனங்களுக்குப் பிரச்சினைகள் ஏற்படும்போது அவற்றில் இருந்து மீண்டு வருவதற்கான ஆற்றல்களை, உத்திகளை அனுபவபூர்வமாக தெரிந்து வைத்திருப்பவர்கள்.
சரின நேரத்தில் அவர்களின் அனுபவமும் ஆற்றலும் வழிகாட்டலும் தேவைப்படும் என்பதை முதலாளிகள் நன்கு உணர்ந்துகொள்ள வேண்டும்.
அதேபோல, முதிய ஊழியர்களும் சூழ்நிலைக்கேற்ப மனப்போக்கை வளர்த்துக்கொள்ள வேண்டும். நிறுவனங்களின் முன்னுரிமைகளை மனதில்கொண்டு அவர்கள் செயல்பட வேண்டும்.
சிரமமான காலங்களில் நீக்குப்போக்குடன் நிலைமைகளை உணர்ந்து விட்டுக்கொடுத்துப் போக வேண்டும். புதுப்புது ஆற்றல்களை, தேர்ச்சிகளை, தொழில்நுட்பங்களை, நவீனங்களைக் கற்றுக்கொள்வதில் பின்தங்கிவிடாமல் ஊழியர் சந்தையில் தவிர்க்க இயலாதவர்களாக, மிக முக்கியமானவர்களாக தங்களை ஊழியர்கள் தக்கவைத்துக்கொண்டு வரவேண்டும்.
இப்படித் தொடர்ந்து பணிற்றும் ஊழியர்கள் ஓய்வுபெறும்போது மனநிறைவான வாழ்க்கை வாழ போதிய பொருள் வளம் இருக்கவேண்டும் என்பதற் காகத்தான் அவர்களுக்கான மத்திய சேம நிதிச் சந்தா விகிதமும் கூட்டப்படுகிறது. ஓய்வுக் காலத்தில் அந்த நிதியில் இருந்து பணம் பெறுவது எளிதாக இருக்கும் வகையில், மசே நிதிக்கான மாற்றங்கள் நடப்புக்கு வரவுள்ளன.
இவை எல்லாம் தாங்கள் வேலை பார்க்கும் காலத்தில் பொருளியலுக்கு உதவுபவர்களாக, ஓய்வுக் காலத்தில் மனநிறைவான வாழ்க்கையை அனுபவிப்பவர்களாக முதிய ஊழியர்கள் வாழ்வதை உறுதிப்படுத்தும்.