செய்திக்கொத்து

போக்குவரத்து விதிமீறல்கள்: ஓரங்கட்டப்பட்ட 37 வாகனங்கள்

தீபாவளிக்கு முதல் நாளன்று போக்குவரத்து விதிகளை மீறியதற்காக 37 வாகனங்களை அதிகாரிகள் ஓரங்கட்டினர்.

வாகனங்களில் புகை வெளியே வரும் சாதனத்தை சட்டவிரோதமாக திருத்தியது, கூடுதலான விளக்குகளைப் பொருத்தியது போன்ற சட்டவிரோத செயல்கள் இடம்பெற்று இருந்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

போலிசாரும் நிலப் போக்குவரத்து ஆணையமும் கூட்டாக சிராங்கூன் ரோடு, கிள்ளான் ரோட்டில் எடுத்த நடவடிக்கையில் மூன்று பேருக்குப் போக்குவரத்துப் போலிஸ் அழைப்பாணை பிறப்பித்தது.

1,000க்கும் மேற்பட்ட மோசடிகள்;

296 பேர் கைது, விசாரணை

ஆயிரத்திற்கும் மேற்பட்ட மோசடிச் சம்பவங்களில் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 296 பேரை போலிஸ் கைது செய்துள்ளது.

அந்த மோசடிகளில் $6.4 மில்லியனுக்கும் அதிக தொகையை அப்பாவிகள் இழந்துவிட்டனர். பிடிபட்ட சந்தேகப் பேர்வழிகளுக்கு வயது 16 முதல் 80 வரை என்று போலிஸ் தெரிவித்துள்ளது.

இணையக் காதல், இணைய வர்த்தகம், அரசாங்க அதிகாரிகள் போன்று நடித்தது, வேலை, கடன் முதலான வடிவில் மோசடிகள் நடந்தன. கைதானவர்களில் 194 பேர் ஆடவர்கள். 102 பேர் பெண்கள். அக்டோபர் 22ஆம் தேதிக்கும் நவம்பர் 5ஆம் தேதிக்கும் இடையில் அதிகாரிகள் எடுத்த நடவடிக்கைகளில் பிடிபட்ட அந்தச் சந்தேக நபர்கள் விசாரிக்கப்பட்டு வருகிறார்கள்.

87 பேர் சிக்கினர்

சிங்கப்பூர் முழுவதிலும் செப்டம்பர் 13ஆம் தேதிக்கும் அக்டோபர் 23ஆம் தேதிக்கும் இடையில் 103 உடற்பிடிப்பு நிலையங்களில் அதிகாரிகள் எடுத்த அமலாக்க நடவடிக்கைகளின் விளைவாக 87 பேர் சிக்கினர்.

அவற்றில் 31 நிலையங்கள் செல்லுபடியாகக்கூடிய உரிமம் இல்லாமல் சட்டவிரோதமாக சேவை வழங்கியது தெரியவந்தது. வேலை பார்க்கும் ஊழியர்கள் பாலியல் சேவைகளை வழங்கவில்லை என்பதை அந்நிலையங்கள் உறுதிப்படுத்தவில்லை. 46 பெண்கள் கைதானதாக போலிஸ் தெரிவித்தது.

தொற்று 1,767 ஆகக் குறைவு

சிங்கப்பூரில் வெள்ளிக்கிழமை புதிதாக 1,767 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியானது. அவர்களில் 1,639 பேர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். 120 பேர் வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதிகளைச் சேர்ந்தவர்கள். வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் எட்டுப் பேர்.

தீபாவளி பொது விடுமுறை காரணமாக குறைவான பரிசோதனைகள் நடத்தப்பட்டதே புதிய தொற்று எண்ணிக்கை குறைவாக இருப்பதற்கு காரணமாக இருக்கலாம் என்று சுகாதார அமைச்சு கூறியுள்ளது.

வெள்ளிக்கிழமை 67க்கும் 85க்கும் இடைப்பட்ட வயதுள்ள ஒன்பது பேர் கொவிட்-19 தொற்று காரணமாக மாண்டதாகவும் அமைச்சு தெரிவித்தது.

ஒட்டுமொத்த மரண

எண்ணிக்கை கூடவில்லை

சிங்கப்பூரில் கொவிட்-19 தொற்று காரணமாக மரணங்கள் கூடினாலும்கூட நாட்டின் ஒட்டுமொத்த மரண எண்ணிக்கை விகிதாச்சாரம் அதிகமாகவில்லை. கொரோனா காரணமாக மரணம் அடைந்தவர்களில் பெரும்பாலானவர்கள் வேறு உடல்நலப் பிரச்சினைகளையும் எதிர்நோக்கிய முதியவர்கள்.

அவர்கள் கொரோனா தொற்று இல்லாவிட்டாலும் வேறு விதமான உடல்நிலைக் கோளாறு காரணமாக மரணமடை வதற்கான வாய்ப்புகள் உண்டு என்பதே இதற்கான காரணம். இதை 'மாற்று மரணக் கோட்பாடு' என்று குறிப்பிட்டு தொற்று நோய் வல்லுநர்கள் இரண்டு பேர் கருத்துக் கட்டுரையில் தெரிவித்து உள்ளனர். அந்தக் கட்டுரை நேற்று வெளியிடப்பட்டது.

2021ல் மாண்டவர்கள் விகிதம், கொவிட்-19க்கு முந்தைய 2016, 2017, 2018ஆம் ஆண்டுகளின் அளவைவிட குறைவு. 2019, 2020ஆம் ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் அது கொஞ்சம்தான் அதிகம். சிங்கப்பூரின் மரண அளவு இந்த ஆண்டில் 100,000 பேருக்கு ஏறத்தாழ 530 ஆக இருக்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!