சிங்கப்பூர் முழுவதும் பயிலும் தாதிமை மாணவர்களைச் சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களுக்கு உறுதுணையாளர்களாகப் பயன்படுத்திக்கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மருத்துவமனைகள் போன்ற சுகாதாரப் பராமரிப்பு நிலையங்களில் அத்தகைய மாணவர்களைப் பணியில் சேர்க்கும் நடைமுறை விரிவுபடுத்தப்பட்டு உள்ளது. அல்லது முன்னதாகவே அது இடம்பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
சுகாதார அமைச்சும் கல்வி அமைச்சும் கூட்டாக இந்த விவரங்களைத் தெரிவித்தன.
தாதிமைப் படிப்பு மாணவர்கள் தங்கள் படிப்பை ஏறக்குறைய முடிக்கும் நிலையில் இருக்கிறார்கள். அவர்கள் பிரதான ஊழியர் அணிக்கு ஆதரவாகத் திகழ்வதில் முக்கிய பணியாற்றுவார்கள் என்று இந்த அமைச்சுகள் கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது.