வெளிநாட்டு ஊழியர்களுக்காக தீபாவளிக் கேளிக்கை நிகழ்ச்சி

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கான தீபாவளிக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, துவாஸ் சவுத் பொழுதுபோக்கு நிலையத்தில் நவம்பர் 4ஆம் தொடங்கி, நான்கு நாள்களுக்கு தீபாவளிக் கேளிக்கை நிகழ்ச்சிகள் நடந்தேறின.

மனிதவள அமைச்சுடன் சேர்ந்து Alliance of Guest Workers Outreach அமைப்பு இந்த கேளிக்கை நிகழ்ச்சிகளை நடத்தியது.

புகைப்படக் கூடங்கள், மனநலனைப் பேணிக் காக்க சிறப்புரை, இலவச முடித்திருத்தச் சேவை உள்ளிட்ட அம்சங்கள் நிகழ்ச்சியில் அங்கம் வகித்தன.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஊழியர்களுக்கு உணவும் வழங்கப்பட்டது. அதுபோக, பல்வேறு விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு 5,000 உணவுப் பொட்டலங்கள் கடந்த நான்கு நாள்களாக விநியோகம் செய்யப்பட்டன.

இன்று நிறைவுபெற்ற நிகழ்ச்சியில், பாலிவுட் நடனம், ரங்கோலிப் போட்டிகளின் இறுதிச்சுற்று நடைபெற்றது. வெற்றியாளர்களுக்கு ரொக்கப் பரிசுகளும் பயணப் பெட்டிகளும் வழங்கப்பட்டன.

நான்கு நாள்களில் ஏறத்தாழ 2,500 பேர் நிகழ்ச்சியில் பங்கெடுத்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!