செய்திக்கொத்து

உணவு, பானக் கடைகளில்

இசைக்கு அனுமதி

உணவு, பானக் கடைகளில் நாளை புதன்கிழமை முதல், பதிவுசெய்யப்பட்ட இசை ஒலிக்க அனுமதிக்கப்படும். கொவிட்-19 கட்டுப்பாடுகளின் ஒரு பகுதியாக கடந்த ஜூன் 18ஆம் தேதியிலிருந்து உணவு, பானக் கடைகளில் இசை ஒலிக்க தடை விதிக்கப்பட்டு வந்த நிலையில், இந்த மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. கொவிட்-19 தொற்றுக்கெதிரான அமைச்சுகள்நிலைப் பணிக்குழு நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங் இதனைத் தெரிவித்தார். எனினும், நேரடி இசை மற்றும் கேளிக்கை நிகழ்ச்சிகளுக்குத் தொடர்ந்து அனுமதி இல்லை.

இதற்கிடையே, வழிபாடுகள், நேரடி நிகழ்ச்சிகள் போன்றவை நடத்தப்படும்போது ஒவ்வொரு பிரிவிலும் (zone) கூடுதலானோர் இடம்பெற அனுமதிக்கப்படும். ஆனால், ஒட்டுமொத்த வருகையாளர் எண்ணிக்கைக்குள் அது இருக்க வேண்டும். சந்திப்புகள், மாநாடுகள், கண்காட்சிகள், விளையாட்டு நிகழ்ச்சிகள், திருமண நிகழ்வுகள் போன்றவையும் இவற்றுள் அடங்கும். பிரிவுகளுக்கு இடையில் குறைந்தது 2 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். ஒவ்வொரு பிரிவிலும் 100 பேர் வரை இடம்பெறலாம்.

அடுத்த ஆண்டு ஜனவரி முதல் பள்ளி இணைப்பாட நடவடிக்கைள் தொடங்கும்

அடுத்த ஆண்டு ஜனவரி முதல் உயர்நிலை மற்றும் உயர்நிலைக்கு மேற்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான இணைப்பாட நடவடிக்கைகள், பள்ளி மாணவர் ஒன்றுகூடல், கற்றல் பயணங்கள் போன்ற கூடுதல் பள்ளி நடவடிக்கைகள் தொடங்கும் என கல்வி அமைச்சு நேற்று தெரிவித்தது. உயர்நிலைப் பள்ளிகள், மில்லேனியா கல்வி நிலையம் ஆகியவற்றில் தேசிய பள்ளி விளையாட்டுகள், சிங்கப்பூர் இளையர் விழா போன்றவை நடத்தப்படும். கட்டுப்பாட்டுத் தளர்வுகளில் ஒன்றாக, உயர்நிலைப் பள்ளிகளிலும் சிறப்புக் கல்விப் பள்ளிகளின் உயர்நிலை மற்றும் மூத்த மாணவர்ப் பிரிவுகள், தொடக்கக் கல்லூரிகள், மில்லேனியா கல்வி நிலையம், உயர்கல்வி நிலையங்கள் ஆகியவற்றில் நாளை முதல் குழுவுக்கு ஐவர் வரை முகக்கவசம் அணிந்து குழு நடவடிக்கைகளில் பங்கேற்கலாம். இந்தக் கல்வி நிலையங்களில், விளை யாட்டாளர்கள், நடுவர்கள், துணை நடுவர்கள் ஆகிய முழுமையாகத் தடுப்பூசி போட்ட பத்து பேர் வரை அடங்கிய குழு விளையாட்டுகளில் பங்கேற்கும் முன்னோட்டத் திட்டம் மேற்கொள்ளப்படும். இது கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சு மேற்கொள்ளும் குழு விளையாட்டுகள் முன்னோட்டத் திட்டத்தை ஒத்திருக்கும்.

பூஸ்டர் தடுப்பூசியை மாற்றிப்

போடுவதால் தவறில்லை

ஃபைசர்-பயோஎன்டெக்/மொடர்னா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் பூஸ்டர் ஊசியை மாற்றி போட்டுக்கொண்டாலும் தவறில்லை. அதனால் ஏற்படக்கூடிய பயன் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும் என்று சிங்கப்பூரின் மருத்துவ சேவைகள் துறை இயக்குநர் கென்னத் மாக் தெரிவித்தார். கொவிட்-19 சிறப்புப் பணிக்குழு செய்தியாளர் கூட்டத்தில் பேசிய அவர், தனது சொந்த அனுபவத்தை எடுத்து கூறினார்.

இணைப்பேராசிரியரான அவர், ஃபைசர்-பயோஎன்டெக்/கமிர்னாட்டி தடுப்பூசியை முழுவதுமாக போட்டுக் கொண்டார். என்றாலும் அதற்கு பிறகு மொடர்னா பூஸ்டர் ஊசியை அவர் போட்டுக்கொண்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!