சிங்டெல் நிறுவனத்தின் டாஷ் (Dash) மின்னியல் பணப்பையைப் பயன்படுத்துபவர்கள் இதைக் கொண்டு விரைவில் இந்தியாவுக்கு பணம் சேவையை எதிர்பார்க்கலாம்.
டாஷ் தளமும் வெஸ்டர்ன் யூனியன் நிறுவனமும் அதற்காக கூட்டு சேர்ந்து செயல்படுகின்றன. அதன்கீழ், டாஷ் சேவையைப் பயன் படுத்தி பல்வேறு நாடுகளுக்குப் பணம் அனுப்பும் சேவையை அவை நேற்று அறிவித்தன.
டாஷ் சேவையைக் கொண்டு தற்போது கடைகளிலும் இணையத்திலும் கட்டணங்கள் செலுத்த முடியும்.
புதிய பணம் அனுப்பும் சேவையில் முதலில் இந்தியாவுக்குப் பணம் அனுப்பும் வசதி வழங்கப்படும். இச்சேவை கட்டம் கட்டமாக செயல்படுத்தப்படும் என்ற நிறு வனங்கள், அது எப்போது நடப்புக்கு வரும் என்று கூறவில்லை.
சிங்கப்பூர் நிதித் தொழில்நுட்ப விழாவில் இத்திட்டம் பற்றி அறிவி க்கப்பட்டது.