வெளிநாட்டு ஊழியரும் கூடிமகிழ்ந்த தீபாவளிக் கொண்டாட்டம்

சிங்­கப்­பூ­ரில் வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்­கான தீபா­வ­ளிக் கொண்­டாட்­டங்­க­ளின் ஒரு பகு­தி­யாக, துவாஸ் சவுத் பொழு­து­போக்கு நிலை­யத்­தில் நவம்­பர் 4ஆம் தேதி தொடங்கி, நான்கு நாள்­க­ளுக்கு தீபா­வ­ளிக் கேளிக்கை நிகழ்ச்­சி­கள் நடந்­தே­றின.

மனி­த­வள அமைச்­சு­டன் சேர்ந்து வெளிநாட்டு ஊழியர் தொடர்புக் கூட்டணி (AGWO) அமைப்பு நிகழ்ச்­சியை நடத்தியது.

புகைப்­ப­டக் கூடங்­கள், மன­ ந­ல­னைப் பேணிக் காக்க சிறப்­புரை, இல­வச முடித்­தி­ருத்­தச் சேவை உள்­ளிட்ட அம்­சங்­கள் நிகழ்ச்­சி­யில் அங்­கம் வகித்­தன.

நிகழ்ச்­சி­யில் கலந்­து­கொண்ட ஊழி­யர்­க­ளுக்கு உண­வும் வழங்­கப்­பட்­டது. அது­போக, பல்­வேறு விடு­தி­களில் வசிக்­கும் வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்கு 5,000 உண­வுப் பொட்­ட­லங்­கள் நான்கு நாள்­க­ளாக விநி­யோ­கிக்கப்பட்டன.

நேற்று முன்தினம் நிறை­வு­பெற்ற நிகழ்ச்­சி­யில், பாலி­வுட் நட­னம், ரங்­கோ­லிப் போட்­டி­க­ளின் இறு­திச்­சுற்று நடை­பெற்­றது.

வெற்றி­யா­ளர்­க­ளுக்கு ரொக்­கப் பரி­சு­களும் பய­ணப் பெட்­டி­களும் வழங்­கப்­பட்­டன. நான்கு நாள்­களில் சுமார் 2,500 பேர் நிகழ்ச்சி­ யில் பங்­கெ­டுத்­த­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!