கொவிட்-19 காரணமாக 4 வயது சிறுவனுக்கு ஏற்பட்டுள்ள அரிய வகை அழற்சி நோய்

கொவிட்-19 கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்ட நான்கு வயது முகம்­மது அலி ஸஃபிர் முகம்­மது அஸ்மி அதி­லி­ருந்து குண­ம­டைந்­தார். ஆனால் ஏறத்­தாழ மூன்று வாரங்­கள் கழித்து அவ­ருக்கு காய்ச்­சல் ஏற்­பட்­டது. குளிர்

­காய்ச்­ச­லால் அவர் அவ­தி­ப்பட்டார். இரண்டு நாட்­கள் கழித்து வாந்தி எடுக்­கும் நிலை­மைக்கு அவ­ரது உடல்­நிலை மோச­ம­டைந்­தது.

இதைப் பார்த்து கவலை அடைந்த அவ­ரது பெற்­றோர், அவரை கேகே மக­ளிர், சிறார் மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்டு சென்­ற­னர். இம்­மா­தம் 1ஆம் தேதி­யன்று அலி ஸஃபிர் அங்கு அனு­ம­திக்­கப்­பட்­டார்.

ஒரே நாளில் அவ­ரது உடல்­நிலை மிக வேக­மாக மோச­ம­டைந்­ததை அடுத்து, சாதா­ரண அறை­யிலிருந்து அவர் கூடு­தல் கண்­கா­ணிப்­புத் தேவை­யுள்­ளோ­ருக்­கான அறைக்கு மாற்­றப்­பட்­டார். அத்­து­டன் நின்­று­வி­டா­மல் தீவிர சிகிச்­சைப் பிரி­வுக்கு மாற்­றப்­படும் நிலை­யும் அவ­ருக்கு ஏற்­பட்­டது.

தீவிர சிகிச்­சைப் பிரி­வில் அவ­ருக்­குச் செயற்கை சுவா­சக் கருவி பொருத்­தப்­பட்­டது. தமது குடும்­பத்­துக்கு ஏற்­பட்ட அந்­தக் கடு­மை­யான சோத­னை­யைப் பற்றி ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளி­த­ழி­டம் அலி ஸஃபிரின் தாயார் திரு­வாட்டி மெரி­லின் கெக­னின்­டின் பகிர்ந்­து­கொண்­டார்.

அலி ஸஃபிர் (எம்­ஐ­எஸ்-சி) எனும் அரிய வகை அழற்சி நோயால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக மருத்­து­வர்­கள் தெரி­வித்­த­னர். கொவிட்-19 கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்ட சிறார் சில­ருக்கு இந்த அரிய, மிகக் கடு­மை­யான நோய் ஏற்­ப­டக்­கூ­டும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

கொவிட்-19 கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டுள்ள ஏறத்­தாழ 8,000 சிறு­வர்­களில் நான்கு பேருக்கு இந்த அரிய வகை அழற்சி நோய் ஏற்­பட்­டுள்­ளது. அவர்­களில் அலி ஸஃபிரும் ஒரு­வர்.

இந்த அரிய வகை அழற்சி நோய் ஏற்­

ப­டு­வ­தற்­கான கார­ணம் இன்­னும் தெரி­ய­வில்லை. ஆனால் கொவிட்-19 கிரு­மித்­தொற்று பாதிப்­புக்­குப் பிறகு இந்த நோய் அடிக்­கடி தலை­தூக்­கு­வ­தாக குழந்தை மருத்­துவ நிபு­ணர் டாக்­டர் லியூ வோய் காங் தெரி­வித்­தார்.

கடந்த செப்­டம்­பர் மாதத்­தில் கொவிட்-19 பாதிப்­பி­லி­ருந்து அலி ஸஃபிர் குண­ம­டைந்­தார். செப்­டம்­பர் 24ஆம் தேதி­யி­லி­ருந்து கடந்த மாதம் 6ஆம் தேதி­யன்று வீட்­டி­லி­ருந்து குண­ம­டை­யும் உத்­த­ரவு அவ­ருக்­குப் பிறப்­பிக்­கப்­பட்­டது.

கடந்த மாதம் 18ஆம் தேதி­யன்று அவர் பள்ளி திரும்­பி­னார். அடுத்த ஏறத்­தாழ மூன்று வாரங்­க­ளுக்கு அலி ஸஃபிர் தமது சகோ­ரர்­க­ளு­டன் துரு­து­ரு­வென விளை­யா­டிக்­கொண்­டி­ருந்­த­தாக திரு­வாட்டி மெரி­லின் கூறி­னார்.

ஆனால் கடந்த மாதம் 29ஆம் தேதி மாலை 6.45 மணி அள­வில் அவ­ருக்­குக் காய்ச்­சல் ஏற்­பட்­டது.

கொவிட்-19 பாதிப்பு இல்லை என கொவிட்-19 பரி­சோ­த­னை­யில் தெரி­ய­வந்­தது. இருப்­பி­னும் அடுத்த சில நாட்­களில் அவ­ரது உடல்­நிலை மோச­ம­டைந்­தது.

இவ்­வ­ளவு சிறிய வய­தில் அலி ஸஃபிருக்கு உடல்­ரீ­தி­யாக பெரும் பாதிப்பு ஏற்­பட்­டுள்­ளதை எண்ணி திரு­வாட்டி மெர­லி­னும் அவ­ரது கண­வ­ரும் கவ­லைப்­ப­டு­கின்­ற­னர்.

தற்­போது அலி ஸஃபிரின் உடல்­நிலை மேம்­பட்­டுள்­ளது. அவ­ருக்­குச் செயற்கை சுவா­சக் கருவி தேவைப்­ப­ட­வில்லை. இருப்­பி­னும், அவர் தொடர்ந்து தீவிர சிகிச்­சைப் பிரி­வில் இருக்­கி­றார்.

அலி ஸஃபிரால் தற்­போது தமது இரு கைக­ளை­யும் உயர்த்த முடி­வ­தாக அவ­ரது தாயார் தெரி­வித்­தார்.

ஆனால் தாதி­யர், இயன் மருத்­துவ சிகிச்­சை­யா­ளர்­கள் ஆகி­யோ­ரின் உதவி ­யோடு சிர­மப்­பட்­டுத்­தான் அவ­ரால் எழுந்து உட்­கார முடி­வ­தாக அவர் கூறி­னார். அவ­ரால் இன்­னும் எழுந்து நடக்க முடி­யவில்லை என்­றார் அவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!