தொற்றால் பாதிக்கப்பட்ட, தகுதி உள்ளோருக்கு என்டியுசி உதவி
தேசிய தொழிற்சங்க காங்கிரசின் (என்டியுசி) அங்கீகாரம் பெற்ற சுயதொழில் புரிவோரும் சுயேச்சையாகப் பணிபுரிவோ ரும் அண்மையில் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டி ருந்தால் ஒருமுறை நிவாரணத் தொகையாக $200 வரை பெற தகுதிபெறுவர். கொவிட்-19 காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டோருக்கு என்டியுசி ஆதரவுக்கரம் நீட்டும் என்று அதன் தலைமைச் செயலாளர் இங் சீ மெங் நேற்று தமது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
புதிய ரயில் நிதி கட்டமைப்பின்கீழ் டௌன்டவுன் ரயில்தட சேவை
டௌன்டவுன் ரயில்தட சேவை நிதி நிர்வாகம் வரும் ஜனவரி முதல் புதிய கட்டமைப்புக்கு மாறுகிறது. அதன்மூலம் இந்த ரயில் சேவையை நடத்தும் எஸ்பிஎஸ் டிரான்ஸிட் நிறுவன நஷ்டத்தின் ஒரு பகுதியை அரசாங்கம் ஏற்கும். அதேநேரம் லாபம் ஈட்டப்படும்போது அதன் பெரும்பகுதியை அரசாங்கம் பெறும். சிங்கப்பூரின் இதர ரயில் சேவை நிதி நிர்வாகத்தின் வரிசையில் இப்போது டௌன்டவுன் சேவையும் சேருகிறது. இருப்பினும் புதிய தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் தடம் இதில் இன்னும் சேரவில்லை. நீடித்து நிலைக்கக்கூடிய நிதி ஆதரவின்கீழ் நம்பத்தகுந்த ரயில் சேவையை தொடர்ந்து வழங்குவதை உறுதிசெய்யும் பொருட்டு டௌன்டவுன் நிதி முறையில் மாற்றம் செய்ய நிலப் போக்குவரத்து ஆணையமும் எஸ்பிஎஸ் டிரான்ஸிட் நிறுவனமும் பரிசீலித்து வந்தன.
சிங்கப்பூருக்குள் நுழைய 36,000 வெளிநாட்டினருக்கு அனுமதி
'விடிஎல்' எனப்படும் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக் கான சிறப்புப் பயணத் திட்டம் தொடங்கப்பட்ட முதல் இரு மாதங்களில் 36,034 வெளிநாட்டினருக்கு சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. புதன்கிழமை மாலை நிலவரப்படி சிங்கப்பூர் சிவில் விமானப் போக்கு வரத்து ஆணையத் தரவுகளின் அடிப்படையிலான எண்ணிக்கை இது. குறுகிய மற்றும் நீண்டகால வருகை யாளர்கள் இந்த அனுமதியைப் பெற்றுள்ளனர். சிறப்புப் பயணத் திட்டத்தில் இடம்பெற்றுள்ள நாடுகளில் தென் கொரியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தோரே இதில் அதிக ஆர்வம் காட்டி வருவதாக ஆணையம் வெளி யிட்ட தகவல் தெரிவித்தது. தென்கொரியாவிலிருந்து சிங்கப்பூர் வருவோருக்கான விண்ணப்பம் திங்கட்கிழமை (நவம்பர் 8) முதல் ஏற்கப்பட்டு வருகிறது. ெசவ்வாய்க்கிழமை இரவு 11.59 மணி நிலவரப்படி, அதாவது இரு நாட்களில் 1,999 விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் 866 அனுமதி குறுகியகால வருகையாளர்களுக் கும் 1,133 அனுமதி நீண்டகால வருகையாளர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன. நவம்பர் 15 முதல் இவர்கள் சிங்கப் பூருக்குள் நுழையலாம். அதேபோல ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தோர் சிங்கப்பூர் வர நவம்பர் 1 முதல் விண்ணப்பிக்க லாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அவர்களிடமிருந்து வந்தவற்றில் 2,423 விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்கப் பட்டுள்ளது.